சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து நாசாவின் முன்னாள் விண்வெளியாளர் மற்றும் கட்டணம் செலுத்தும் 3 விண்வெளியாளர்களை ஏற்றிவந்த ஸ்பேஸ் எக்ஸ் ட்ரகன் விண்கலம் பூமிக்குத் திரும்பியுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்ட இவ்விண்கலம் 12 மணித்தியாலங்களின் பின்னர், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பனாமா சிட்டிக் அருகில் அத்திலாந்தக் சமுத்திர்தில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 11.04 மணியளவில் இறங்கியது.
அக்ஸியோம் நிறுனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயணத்திட்டத்துக்கு ஏஎக்ஸ் 2 எனப் பெயரிடப்பட்டிருந்தது.
நாசாவின் முன்hனள் விண்வெளியாளர் பெகி விட்சன் தலைமையிலான இப்பயணக்குழுவில் சவூதி அரேபியாவின் ரயானா பர்னாவி, அலி அல்கர்னி, அமெரிக்காவின் ஜோன் ஷொப்னர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
கடந்த 21 ஆம் திகதி இவர்கள் விண்வெளிக்குப் புறப்பட்டனர். இப்பயணத்தின் மூலம், விண்வெளிக்குச் சென்ற முதல் அரேபிய பெண் எனும் பெருமையை ரயானா பர்னாவி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்த ட்ரகன் எனும் இவ்விண்கலத்தில் இக்குழுவினர் பயணத்தனர். அதே நிறுவனம் பால்கன் 9 ரொக்கெட் மூலம் இவ்விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
உலகில் முற்றிலும் தனியார் நிதியில் நடத்தப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான இரண்டாவது பயணம் இதுவாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM