டொலரின் பெறுமதி வீழ்ச்சியின் அனுகூலத்தை நிர்மாணத்துறையை வலுவூட்ட பயன்படுத்த வேண்டும் - சியம்பலாப்பிட்டிய

Published By: Vishnu

31 May, 2023 | 02:31 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

உலக சந்தையில் சீமெந்து, இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைந்துள்ள நிலையில் டொலரின் பெறுமதி வீழ்ச்சியின் அனுகூலத்தை இலங்கையின் நிர்மாணத்துறையை வலுவூட்டுவதற்கு பயன்படுத்த வேண்டுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

விலை அதிகரிப்பு விகிதத்துடன் ஒப்பிடுகையில் விலை குறைப்பு வீதம் மிகவும் மெதுவாகவே காணப்படுவதாக நிர்மாணத்துறையின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது நிதி இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உலக சந்தையின் கட்டுமானப் பொருட்களின் விலை வீழ்ச்சியை அவதானித்து ஒரு மாதத்தில் கூடி உரிய விலை குறைப்பு வீதத்தை  அறிவிக்க முடியும்.

கடந்த சில மாதங்களில் ரூபாயின் பெறுமதி சுமார் 20 வீதத்தால் வலுவடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகள் கூறுகின்றன.

குறிப்பாக ரூபாவின் பெறுமதியை ஒப்பிடும் போது விநியோகத் துறைக்கான பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்து வருவதால் அவற்றின் விலையை குறைப்பது நியாயமானதா? என ஆராயுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார்.

ஏனெனில் விலை உயர்வுடன் ஒப்பிடும் போது டொலரின் அதிகரிப்பு பொருட்களின் விலை உயர்வு போல் வேகமாக இடம்பெறாது என்பதை நாம் பொதுவாக அறிவோம். எனவே பொருளாதாரத்தை மீட்டெடுக்க சட்ட வழிகாட்டுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்கா அழைத்தால் வொஷிங்டனுக்குச் சென்று எமது...

2025-01-14 14:29:52
news-image

துப்பாக்கி முனையில் யுவதியை கடத்திச் சென்ற...

2025-01-14 14:21:51
news-image

ஏறாவூரில் கிணற்றுக்குள் வீழ்ந்து 2 வயது...

2025-01-14 14:18:39
news-image

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று...

2025-01-14 14:17:38
news-image

நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக...

2025-01-14 14:18:27
news-image

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு...

2025-01-14 13:39:17
news-image

நவகமுவ பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

2025-01-14 13:15:19
news-image

பமுனுகமவில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது...

2025-01-14 13:06:21
news-image

பதுளையில் ரயிலில் மோதி ஒருவர் பலி!

2025-01-14 11:03:45
news-image

நீர்கொழும்பில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-01-14 10:50:53
news-image

அத்துருகிரியவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இருவர்...

2025-01-14 10:35:01
news-image

வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண் உயிரிழப்பு!

2025-01-14 10:24:58