ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் மாநாடு

Published By: Ponmalar

31 May, 2023 | 12:51 PM
image

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 26 ஆவது வருடாந்த மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கொழும்பு - 10 இல் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

வழமைபோன்று இரு அமர்வுகளாக மாநாடு நடைபெறவிருப்பதோடு, இரண்டாவது அமர்வில் யாப்பு திருத்தம், புதிய உத்தியோகஸ்தர் தெரிவு என்பன இடம்பெறும் என போரத்தின் செயலாளர் சிஹார் அனீஸ் தெரிவித்துள்ளார்.

 புதிய உத்தியோகஸ்தர் தெரிவுக்கு வேட்பு மனு கோரப்பட்டுள்ளதோடு, தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கும்  11 செயற்குழு அங்கத்தவர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோம் ஜூன்மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்களை பதிவுத்தபாலிலோ நேரிலோ செயலாளருக்கு வழங்கி வைக்குமாறு கோட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வேட்புமனுக்களை தலைவர் அல்லது செயலாளரிடமிருந்து வட்ஸ்அப் ஊடாகப் பெறமுடியும் எனவும் 

மாநாடு தொடர்பான விபரங்களோ வேட்புமனுவோ தபாலில் அனுப்பப்படாது எனவும் செயலாளர் தெரிவித்தார்.

யாப்புத் திருத்தம் தொடர்பில் அங்கத்தவர்களின் கருத்துக்கள் மற்றும் திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் அவற்றை  ஜூன் 18 ஆம் திகதிக்கு முன்னர் பொதுச் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது. 

இதேவேளை, தங்களது வருகையை பொதுச்செயலாளர் சிஹார் அனீஸ் அல்லது பொருளாளர் ஜெம்ஸித் அஸீமிற்கு  வட்ஸ் அப் ஊடாக உறுதிப்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

வருடாந்தக் கட்டணம் செலுத்தாதவர்கள் அதனை மீடியா போரத்தின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு பற்றுச்சீட்டை 0777874983 எனும் இலக்கத்திற்கு அனுப்புமாறும் கோரப்படுகிறது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இம்மாநாடு நடைபெறுவதால் அங்கத்தவர்கள் அனைவரும் தமது ஒத்துழைப்பை வழங்கும் செயற்குழு எதிர்பார்க்கிறது.

முன்னதாக ஜூன் 24 ஆம் திகதி மாநாட்டை நடத்த தீர்மானிக்கப்பட்டதோடு, தவிர்க்க முடியாத காரணத்தால் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொட்டாஞ்சேனை கதிரேசன் வீதி, புனித வேளாங்கன்னி...

2024-09-09 23:15:12
news-image

கொழும்பு பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர்...

2024-09-09 21:54:22
news-image

நுவரெலியா ஹாவாஎலிய ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய...

2024-09-09 17:48:29
news-image

நுவரெலியா ஸ்ரீ மதுர கணபதி கோவிலில்...

2024-09-07 13:37:25
news-image

பர்ஹான் முஸ்தபாவின் "மரக்கல மீகாமன்" நூல்...

2024-09-07 13:32:14
news-image

பிலியந்தலை விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள்...

2024-09-07 14:19:14
news-image

HWPL உலக சமாதான உச்சிமாநாட்டின் 10...

2024-09-09 19:48:46
news-image

"எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவெட் லிமிட்டெட்...

2024-09-05 18:08:24
news-image

யாழ். தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில்...

2024-09-04 18:02:31
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்

2024-09-04 17:37:08
news-image

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய மஹோற்சவம் ...

2024-09-04 17:27:35
news-image

அகஸ்டினா அபிக்கா டியானாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்

2024-09-05 17:10:53