இன்றைய திகதியில் எம்மில் சிலர் சொந்த வீடு அல்லது வாடகை வீடு ஆகியவற்றில் இருந்தாலும் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதை விரும்புகிறார்கள். தங்களது இல்லத்தின் ஒரு பகுதியிலோ அல்லது மக்கள் கூடும் இடங்களிலோ சிறிய அளவில் ஏதேனும் ஒரு நுகர்வோர் பொருளை விற்பனை செய்ய விரும்புகிறார்கள். இந்த விருப்பம் அவர்களுக்கு வெற்றியை தர வேண்டும் என்றால்... சில்லறை விற்பனையே தொடங்கும் முன், அதில் வெற்றி பெற இயலுமா? என்பது குறித்த ஜோதிட நிபுணர்களின் வழிகாட்டலை பெற வேண்டும். அதன் பிறகு நீங்கள் உங்களுடைய விருப்பத்திற்குரிய அல்லது தெரிந்த பொருளை விற்பனை செய்வதைவிட, அந்த பகுதியில் உள்ள மக்களின் சிறிய அளவிலான தேவைகளை உணர்ந்து, அதனை சில்லறை விற்பனை நிலையத்தில் வைத்தால்.. வியாபாரம் பெருகும்.
சிலர் எந்தவித திட்டமும் இன்றி... யாருடைய ஆலோசனையும் பெறாமல்... 'கடின உழைப்பு வெற்றி தரும்' என்ற கொள்கையில் ஈடுபாடு கொண்டு, சில்லறை விற்பனை நிலையத்தை தொடங்குவர். ஆனால் அதில் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரம் நடைபெறாமல் , குறைவான லாபம் தான் கிடைத்து வரும். இவர்களும் தங்களது வியாபாரத்தை பெருகுவதற்கு கீழ்காணும் ஒரு உபாயத்தை... சில வியாபார நுட்பங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக நீங்கள் உங்களது சில்லறை விற்பனை நிலையத்தில் பணம் வாங்கி, மீதம் கொடுக்கும் காசாளராக பணியாற்றினால்.. வாடிக்கையாளர்கள் எந்த பொருளை வாங்கினாலும், அந்த பொருளுக்கான விலையை, அவர்களின் வலது கையால் பணத்தை கொடுக்கச் சொல்லுங்கள். நீங்களும் மீதி சில்லறையை கொடுக்கும் போது வலது கையால் கொடுக்க வேண்டும். இப்படி செய்யும் போது வலது கையில் மறைந்திருக்கும் செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமியின் வசிய பரிமாற்றம்... மேலும் வளர்ச்சியை வழங்கும்.
நீங்கள் வாடிக்கையாளரிடமிருந்து பெற்ற பணத்தை எண்ணும் போதும்... மீதமுள்ள பணத்தை நீங்கள் வழங்கும் போதும்... பணத்தை ஒருபோதும் எச்சிலாலோ அல்லது உங்களது வியர்வையாலோ தொட்டு புரட்டாதீர்கள். இதற்காக உங்களுக்கு அருகே மாற்று ஏற்பாட்டை செய்து கொள்ள வேண்டும். அதையும் கடந்து உங்களது பழக்கத்தால் இதனை தொடர்ந்து செய்தால்.., நாளடைவில் அதிர்ஷ்ட தேவி உங்களிடமிருந்து விலகி, தரித்திரம் மற்றும் எதிர்மறை ஆற்றல் உங்களது கடையை... விற்பனை நிலையத்தை.. ஆக்கிரமித்துக் கொள்ளும். இது லாபத்தை தடுத்து, நட்டத்தை உண்டாக்கும்.
நீங்கள் உங்களது வியாபாரம் தொடர்பான கணக்கை எழுத தொடங்கும் முன்... அதற்கான பிரத்யேக புத்தகத்தின் முதல் பக்கத்தில் அஷ்டகந்தம் எனப்படும் மூலிகையை கொண்டு ஸ்ரீ அல்லது சுப லாபம் என எழுதுங்கள். இவை உங்களுக்கு ஜன வசியத்தை அதிகரித்து, பண வரவை பெருக்கும்.
வீட்டிலிருந்து விற்பனை நிலையத்திற்கு வரும்போதும்... விற்பனை நிலையத்திலிருந்து வீட்டிற்கு செல்லும் போதும் அல்லது வங்கிகள் உள்ளிட்ட வெளியிடங்களுக்கு பயணிக்கும் போதும்... உங்களது சட்டைப்பை அல்லது பர்ஸ்ஸில் பணம் இல்லாமல் செல்லாதீர்கள். பணத்தை வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் பணம் தான் பணத்தை ஈர்க்கும் வல்லமை பெற்றது. அதனால் உச்சபட்ச தொகையை அதாவது 500, 2000 போன்ற அதிக தொகை கொண்ட பணத்தை வைத்துக்கொண்டு செல்வது நன்மை பயக்கும்.
உங்களது சில்லறை விற்பனை நிலையத்தில் அல்லது தொழிலகத்தில் பணப் பெட்டி வைத்திருக்கும் அறையை மஞ்சள் வண்ணத்தில் வைத்திருப்பது அதிர்ஷ்டத்தை அதிகரித்து பணவரவை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும். அதே தருணத்தில் பணப்பெட்டி இருக்கும் அறையை கருப்பு, சிவப்பு, நீல நிறங்கள் போன்றவற்றை பயன்படுத்தினால்... இயல்பான அளவிலும் அதற்கும் குறைவான அளவிலும் தான் பணவரவு இருக்கும். சில தருணங்களில் எதிர்பார்த்த பண வரவு கூட கிடைக்காது. இதனால் இந்த மூன்று வர்ணங்களைத் தவிர்ப்பது நலம்.
உங்களது விற்பனை நிலையத்தில் பொது மக்களின் வருகை அதிகரிக்க வேண்டுமென்றால், தினமும் “லட்சுமி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட சுவாஹா” எனும் மந்திரத்தை மனதில் உச்சரித்துக் கொண்டே ஊதுபத்தி அல்லது சாம்பிராணி தூபம் காண்பிக்க வேண்டும். இதன் மூலம் உங்களது விற்பனை நிலையத்திற்கு வருகை தந்த எதிர்மறை ஆற்றல் கொண்டவர்களின் எதிர்மறை சக்தி உடனடியாக அங்கிருந்து விலகி, நேர் நிலையான ஆற்றலை பரவி வியாபாரத்தை அதிகரிக்கும்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் மாலை 6:00 மணி அளவில் அல்லது 5:30 மணி முதல் ஏழு மணிக்குள் ஒரு தாமிர செம்பில் கொஞ்சம் தண்ணீர் வைத்து அதில் சிறிது மஞ்சள் பொடி போட்டு, வடக்கு முகம் நோக்கி அமர்ந்து, ''ஓம் ஸ்ரீ ஹ்ரீம் க்லீம் ஶ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திர திஷ்ட்ட திஷ்ட்ட சுவாஹா'' எனும் மந்திரத்தை மனதில் உச்சரித்துக் கொண்டே அந்த மஞ்சள் நீரை கடையின் உள்பகுதியிலும், வாசல் பகுதியிலும் தெளிக்க வேண்டும். இதனாலும் காற்று உள்ளிட்ட பஞ்சபூதங்கள் வழியாகவும்.. இதனை தங்களின் வாழ்வாதாரமாக கொண்ட வாடிக்கையாளர்களின் எதிர்மறை ஆற்றலும், உடனடியாக வணிக தலத்திலிருந்து அகன்று... லாபத்தை தொடர்ந்து தரும்.
சிலர் எம்மிடம், ''ஐயா..! நீங்கள் மேற்கூறிய அனைத்து விடயங்களையும் பயன்படுத்தி பார்த்து விட்டோம். எங்களது விற்பனை நிலையத்தில் மக்களின் வருகை இல்லாமல்.. வியாபாரம் நடைபெறாமல் தொடர்ந்து கஷ்டத்தில் இருக்கிறோம். தொழில் நடத்திடவே தடுமாறுகிறோம். என்ன செய்வது?': என மனதிற்குள் புலம்புவர். இவர்கள் பின்வரும் விடயத்தை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும்.
ஓம் நமோ பகவதி பத்மா
பத்மாவதி ஓம் ஹ்ரீம் ஶ்ரீம்
பூர்வாய தக்ஷணாய
பஸ்சிமாய உத்தராய
ஆனுபூரக சர்வே ஜன
வஸ்யம் குரு ஸ்வாஹா!!
எனும் மந்திரத்தை மனதில் உச்சரித்துக் கொண்டு காலை அல்லது மாலை 6:15 மணி முதல் 6.45 மணிக்குள் உங்களது விற்பனை நிலையத்தில் இறைவனின் முன்னாள் வைத்துக் கொண்டிருக்கும் நீரை, விற்பனை நிலையம் முழுவதிலும் தெளித்தால் லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு, வியாபாரம் விரிவடைந்து லாபம் அதிகமாக கிடைக்கும்.
மேற்கூறிய நுட்பமான மற்றும் சூட்சமமான விடயங்களை செய்தால்.., பண வரவு அதிகரிக்கும். சில முன்னணி நிறுவனங்களில் இதனை அதன் உரிமையாளர்கள் மேற்கொள்ளாமல்.., கடை ஊழியர்களை வைத்து இதனை செய்கிறார்கள். இப்படி செய்வதன் மூலம் சிலருக்கு எதிர்பார்த்த பண வரவு கிட்டுவதில்லை. இதனால் உரிமையாளர்கள் இதனை தொடர்ந்து செய்து வரும்போது, விற்பனை நிலையம் முழுவதும் நேர்நிலையான ஆற்றல் அதிகரித்து, ஜன வசியம் உண்டாகி, பொதுமக்கள் வருகை தருவர். இதனூடாக வியாபாரம் செழிக்கும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM