பிறந்த பச்சிளங்குழந்தை வளர்ப்பு என்பது, வீட்டில் உள்ள மூத்த உறுப்பினர்களின் கண்காணிப்பும், குடும்ப மருத்துவர்களின் கண்காணிப்புடனும் நடைபெறுகிறது.
குழந்தை வளரும்போது மலச்சிக்கல், வாந்தி, பேதி, காய்ச்சல்... ஆகியவை ஏற்படும். இது குறித்து பெற்றோர்கள் மருத்துவர்களை அணுகி முழுமையான விழிப்புணர்வை பெற வேண்டும்.
அதிலும் குறிப்பாக பெற்றோர்களுக்கு அதீத அச்சத்தை உண்டாக்கும் காய்ச்சல் வலிப்பு குறித்து, பெற்றோர்கள் முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
காய்ச்சல் வலிப்பு என்பது ஆங்கிலத்தில் Febrile seizure என குறிப்பிடப்படுகிறது. எம்முடைய பிள்ளைக்கு வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, காய்ச்சல் உண்டாகி, அதன் அளவு நூறு டிகிரி ஃபாரன்ஹீட்டை கடக்கும் போது... சில பிள்ளைகளுக்கு வலிப்பு ஏற்படும்.
இதனை காய்ச்சல் வலிப்பு என வகைப்படுத்துகிறார்கள். இந்த காய்ச்சல் வலிப்பும் Simple Febrile Seizure மற்றும் Complex Febrile Seizure என இரண்டு வகையாகப் பிரித்திருக்கிறார்கள்.
இத்தகைய காய்ச்சல் வலிப்பின் போது, குழந்தைக்கு போதிய மருத்துவ பாதுகாப்பினை வழங்க வேண்டும். இத்தகைய தருணங்களில் குழந்தைகளுக்கு வாந்தி, மூச்சு திணறல், தூக்கமின்மை ... போன்ற பாதிப்புகள் இருந்தால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று தீவிர சிகிச்சையை பெற வேண்டும்.
மருத்துவர்கள் எவ்வகையான காய்ச்சல் வலிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதனை ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை மூலம் தெரிந்து கொண்டு, அதற்கான முதன்மையான நிவாரண சிகிச்சையை வழங்குவர். சில பிள்ளைகளுக்கு எலக்ட்ரோஎன்சால்பாக்கோகிராம் எனும் பரிசோதனையை மேற்கொள்ள பரிந்துரைப்பர்.
பிறகு பாதிப்பின் தன்மையை பொறுத்து அதற்கேற்ப நிவாரண சிகிச்சையை மருத்துவர்கள் வழங்குவர். இதன் பிறகு ஆறு மாதம் வரை மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பு நீடிக்கும்.
ஒரு வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கு இத்தகைய காய்ச்சல் வலிப்பு ஏற்பட்டால், அதனை மீண்டும் வராமல் தடுப்பதற்கான வழிமுறையையும், வாழ்க்கை நடைமுறையும் மருத்துவர்கள் பரிந்துரைப்பர். காய்ச்சல் வலிப்பு ஏற்பட்டால், அது குறித்து பெற்றோர்கள் அச்சப்படத் தேவையில்லை. தற்போது மருத்துவ தொழில்நுட்பங்கள் மேம்பட்டு இருப்பதால், இதற்கு முழுமையான நிவாரணத்தை சிகிச்சையின் மூலம் உரிய தருணத்தில் பெறலாம்.
டொக்டர் விக்னேஷ்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM