பிரபலங்கள் தங்களது வாழ்க்கை வரலாறை சுயசரிதை நூலாக எழுதுவது பெசனாகி வருகிறது. அந்த வரிசையில் இலங்கை மற்றும் இந்தியாவின் தெற்கு பகுதியில் இயங்கி வரும் பி வி ஆர் பொழுதுபோக்கு குழுமத்தின் தென் மண்டல தலைவரான திருமதி மீனா சாப்ரியா, 'அன்ஸ்டாப்பபிள்' எனும் பெயரில் தனது வாழ்க்கையை, வாழ்க்கை வரலாறு நூலாக எழுதியிருக்கிறார்.
இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டிருக்கிறார்.
இதன்போது ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில்,
“இந்த நூல் வெளியீட்டு விழாவில் பேசுவதற்காக எழுத்தாளர் மீனாவை தொடர்பு கொண்டு உரையாடினேன்.
அதன் போது அவர் வாழ்க்கையில் சந்தித்த சவால்களை விவரித்த போது, எமக்கு எம்முடைய தாயாரின் நினைவு தான் வந்தது. திரையுலகில் தொடக்க காலகட்டத்தில் ஏராளமான எதிர்மறை விமர்சனங்களை நான் எதிர் கொண்டிருக்கிறேன்.
அதை எல்லாம் கடந்து வந்ததற்கு நானும் அன்ஸ்டாப்பபுளாக இருந்தது தான் காரணம். எழுத்தாளர் மீனா அவருடைய வாழ்க்கை வரலாற்று புத்தகத்திற்கு 'அன்ஸ்டாப்பபுள்' என பெயர் வைத்திருப்பதை நான் பாராட்டுகிறேன்.
நான் புத்தகங்களை வாசிப்பது குறைவுதான். பெரும்பாலும் நான் நடிக்கவிருக்கும் திரைப்படத்தின் திரைக்கதைகளைத் தான் வாசிக்கிறேன்.
கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தொடர்ந்து நடிப்பதால், எனக்கு ஆண்களை பிடிக்காது என நினைத்துக் கொள்ள வேண்டாம்.
என்னை பலரும் பெண்ணியவாதியா? என கேட்டனர். நான் ஃபெமினிஸ்ட் கிடையாது. ஏனெனில் ஆண்களிலும் தவறானவர்கள் இருக்கிறார்கள். பெண்களிலும் தவறானவர்கள் உள்ளனர்.
எழுத்தாளர் மீனா எழுதிய இந்த புத்தகம் ஏராளமான வாசகர்களை சென்றடைய வேண்டும். வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM