வட கொரியா ஏவிய உளவுச் செய்மதி கடலில் வீழ்ந்தது

31 May, 2023 | 10:48 AM
image

வட கொரியா இன்று விண்வெளிக்கு அனுப்ப முயன்ற உளவுச் செய்மதி கடலில் வீழ்ந்துள்ளது.

வட கொரியாவின் விண்வெளி முகவரகம் இது தொடர்பாக விடுத்த அறிக்கையொன்றில், இராணுவக் கண்காணிப்பு செய்மதியான மலிகயோங் 1 (Malligyong) எனும் செய்மதியை, சோலிமா-1 ('Chollima-1') ரொக்கெட் மூல் இன்று அதிகாலை ஏவியதாக தெரிவித்துள்ளது.

எனினும், இரண்டாவது கட்டத்தின் என்ஜினின் அசாதாரண ஆரம்பம் காரணமாக இந்த ரொக்கெட் கடலில் வீழ்ந்ததாக அம்முகவரகம் தெரிவித்தள்ளது.

மேற்ப‍டி ரொக்கெட் பாகங்கள் சிலவற்றை தென் கொரியா கைப்பற்றியுள்ளது.

வட கொரியாவின் ஏவுகணை சோதனை முயற்சிகள், ஐநா பாதுகாப்புச் சபையின் தீர்மானத்துக்கு முரணானதாகும்.

இந்நிலையில், ஐநா செயலாளர் நாயககம் அன்டோனியோ குட்டேரெஸ், வடகொரியாவின் செய்மதி ஏவுமு; முயற்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா ஆகியனவும் கண்டனம் தெரிவித்துள்ளன.

வட கொரியாவுக்குச் சொந்தமான, இயங்கும் நிலையிலுள்ள செய்மதி எதுவும் தற்போது விண்வெளியில் இல்லை. (Photo: AFP)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47