தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து, தேசிய விருது பெற்ற திரைப்படங்களில் நடித்த நடிகர் குரு சோமசுந்தரம் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு 'பெல்' என பெயரிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் வெங்கட் புவன் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் 'பெல்'. இதில் நடன இயக்குநரும், நடிகருமான ஸ்ரீதர், நடிகர் குரு சோமசுந்தரம், மாஸ்டர் நிதீஷ் வீரா, பீட்டர் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
வெயிலோன் கதை, வசனம் எழுதியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரணி கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, ரோபர்ட் இசையமைத்திருக்கிறார்.
இயற்கை மருத்துவத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ப்ரோகன் மூவிஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பீட்டர் ராஜ் தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், “பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியர், பாதுகாக்கப்பட வேண்டிய ரகசியங்களை தனது நம்பிக்கைக்குரிய சீடர்களுக்கு சொல்லி அதை பாதுகாக்க கட்டளையிட்டார்.
ரகசியங்களை பாதுகாப்பதில் நன்மைக்கும், தீமைக்கும் இடையே நடைபெற்ற போராட்டத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. நான் லீனியர் முறையில் காதல், குடும்பம், எக்சன் என அனைத்து அம்சங்களும் இணைக்கப்பட்டு, பொழுது போக்கு படைப்பாக தயாராகி இருக்கிறது.” என்றார்.
இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து, தணிக்கை சான்றிதழும் பெறப்பட்டிருப்பதால், விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM