புதிய பாராளுமன்ற கட்டடம் புதிய இந்தியாவை உருவாக்கும் - பிரதமர் மோடி

Published By: Digital Desk 5

31 May, 2023 | 12:28 PM
image

இரண்டு ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்தியாவின் புதிய பாராளுமன்றத்தின் திறப்பு விழா, ஒரு நாட்டின் நாகரீக வரலாற்றை எடுத்துரைக்கும் ஒரு தருணத்தை குறிக்கிறது.

அதே நேரத்தில், மிகவும் வளமான மற்றும் சமமான எதிர்காலத்திற்கான வாக்குறுதியைக் கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 25 ஆண்டுகால சுதந்திரப் போராட்டத்தின் தீர்க்கமான கட்டத்தின் போது காணப்பட்ட தேசிய நனவின் விழிப்புணர்வை இந்தியா காண்கிறது. அந்தக் கட்டிடத்தை மீண்டும் ஒரு 'புதிய இந்தியாவின்' அடையாளமாகக் காட்டி, அதை தனது அரசாங்கத்தின் நலன்புரி விநியோகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான 21 எதிர்க்கட்சிகள், குடியரசுத் தலைவரை அழைக்காததன் மூலம்;, கடுமையான அவமான செயல் என்று எதிர்ப்புத் தெரிவித்து விழாவில் பங்கேற்கவில்லை.

புதிய கட்டிடத்தில் தனது முதல் உரையை ஆற்றிய பிரதமர் மோடி, புதிய கட்டிடம் 140 கோடி இந்தியர்களின் அபிலாஷைகள் மற்றும் கனவுகளின் பிரதிபலிப்பாகும். நாட்டின் உறுதியைப் பற்றிய செய்தியை உலகுக்கு உணர்த்துவதாகவும் 'தேசியப் பெருமை' உணர்வை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது என்றார்.

இது நமது ஜனநாயகத்தின் கோவில். இது இந்தியாவின் உறுதியைப் பற்றி உலகுக்குச் சொல்லும் செய்தி. இந்த புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திட்டமிடலை யதார்த்தத்துடன் இணைக்கிறது. கொள்கையை உணர்தல், நிறைவேற்றுவதற்கான மன உறுதி ஆகியவற்றுக்கு வலு சேர்க்கிறது. புதிய பாதைகளில் பயணிப்பதன் மூலம் மட்டுமே புதிய மாதிரிகளை உருவாக்க முடியும்.

புதிய ஆற்றல், புதிய ஆர்வம், புதிய உற்சாகம், புதிய சிந்தனை மற்றும் புதிய பயணம் உள்ளது. புதிய தரிசனங்கள், புதிய திசைகள், புதிய தீர்மானங்கள் மற்றும் புதிய நம்பிக்கை உள்ளது. இந்தியா முன்னேறும் போது, உலகம் முன்னோக்கி நகர்கிறது. நாடாளுமன்றத்தின் இந்தப் புதிய கட்டிடம் இந்தியாவின் வளர்ச்சியுடன் உலகின் வளர்ச்சிக்கும் அழைப்பு விடுக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிமுக- பாஜக கூட்டணி முறிந்தது! அதிமுக...

2023-09-25 17:44:24
news-image

எனது பெற்றோர் அகதிகள் நானும்அகதி எனது...

2023-09-25 12:36:49
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து...

2023-09-25 11:12:56
news-image

தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 19...

2023-09-25 09:59:32
news-image

சூரியனை சுற்றியுள்ள மிகவும் ஆபத்தான சிறுகோளின்...

2023-09-25 06:35:43
news-image

சீக்கிய செயற்பாட்டாளர் படுகொலை - அமெரிக்காவே...

2023-09-24 13:23:59
news-image

பெங்களூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம் :...

2023-09-24 14:33:39
news-image

உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன்...

2023-09-23 12:24:13
news-image

ரஸ்யாவின் கிரிமியா கருங்கடல் கடற்படைதளத்தின் மீது...

2023-09-23 08:34:44
news-image

ஜி20 மாநாட்டில் பல தலைவர்கள் கனடா...

2023-09-22 14:58:18
news-image

உலகின் மிகப்பெரிய ஊடக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய...

2023-09-22 12:59:14
news-image

சீக்கிய செயற்பாட்டாளர் கொல்லப்பட்ட விவகாரம் -...

2023-09-22 13:05:48