தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றி 2014 இறுதியில் நிரந்தரமாக்கப்பட்ட பொது ஊழியர்களை மீண்டும் தற்காலிக  ஊழியர்களாக மாற்றுவது தொடர்பில் ஏற்பட்டிருந்த சர்ச்சைக்கு இன்று ஜனாதிபதியின் தலையீட்டில் தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

தேயிலை ஆராய்ச்சி நிலைய பொது ஊழியர்கள் பிரச்சினை தொடர்பில் நான் பாராளுமன்றில்ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்வைத்து  பேசியும் , நிலையத்துக்கு விஜயம் செய்துஅதிகாரிகளுடன் கலந்துரையாடியும் இன்று தலவாக்கலைக்கு சனாபதியிடம் அவற்றைநினைவூட்டியும் வெற்றி காணப்பட்டுள்ளது. 

தேயிலை ஆராய்ச்சி நிலைய 92 வது ஆண்டு நிறைவையும் இலங்கைக்கு தேயிலைகொண்டுவரப்பட்ட 150 வது ஆண்டு விழாவையும் ஓட்டியதாக நடைபெற்ற விழாவுக்கு வருகை தந்தஜனாதிபதி அடுத்த அமைச்சரவையில் தீர்மானம் எடுத்து குறித்த பொது ஊழியர்களைநிரந்தரமாக்குவதாக தனது உரையில் உறுதி வழங்கியுள்ளதாகவும், அதற்காக ஊழியர்கள் சார்பில் தமது நன்றிகளைத் தெரிவித்ததாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.