புத்தகங்களையும் விட்டு வைக்காத சிங்கள பேரினவாதம்

31 May, 2023 | 10:18 AM
image

1981 ம்ஆண்டு  மே 31ம் ஆண்டு நள்ளிரவிற்கு சற்று முன்னதாக யாழ்நகரை மையம் கொண்டு ஆரம்பமாகி மூன்று நாட்கள் வரை தொடர்ந்த  வெறியாட்டத்தில்  யாழ்ப்பாண பொதுநூலகமும்  தீக்கிரையாக்கப்பட்ட நினைவுகள்  இலங்கையின் தமிழ் பேசும் மக்களையும் மானிட நேயர்களையும்  மீண்டுமொருமுறை ஆக்கிரமிக்க கூடும்.

யாழ்நகரமும்யாழ் பொதுசன யாழ்ப்பாண பொதுநூலகத்தையும்  ஈழநாடு அலுவலகத்தையும் - இன்னும் பலவற்றையும் விழுங்கிய தீயின் சுவாலை  எங்கள் மனங்களில் மீண்டுமொரு பரவக்கூடும்.

  அதற்கு காரணமானவர்களையும் நாங்கள் மீண்டுமொரு நினைத்துப்பார்க்க கூடும்.

அது யாழ்ப்பாணத்தில் மாவட்ட தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருந்த காலம்

பிரச்சாரம் மிக உச்சத்தில் இருந்த தருணம்தேர்தல்பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக யாழ்நகரில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த நேரம்.

அவ்வேளை யாழ் நாச்சிமார் கோவிலடியில் இடம்பெற்ற சம்பவத்தை பயன்படுத்தி  காடையர் கூட்டம் யாழ்ப்பாணத்தை இலக்குவைக்க தொடங்கியது.

தன்னிடம் ஏற்கனவே காணப்பட்ட தெளிவான திட்டத்தை உத்தரவுகளை அரங்கேற்ற தொடங்கியது.

 

 இரவு 10 மணிக்கு நூலகத்திற்குள் நுழைந்த காடையர் கும்பலொன்று அங்கிருந்த காவலாளிகளை துரத்தி அடித்து விட்டு தனது படுபாதகத்தை ஆரம்பித்தது என இந்த பெருந்துயரின் நினைவுப்பதிவுகள் சொல்கின்றன.

அவர்கள் அந்த நூலகத்தில் காணப்பட்ட 97 ஆயிரம் கிடைத்ததற்கரிய நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை பெற்றோல் ஊற்றி எரித்தனர் . 

 

தாங்கள் உயிரினும் அதிகம் நேசித்த நூலகம் எரியூட்டப்படுவதை அறிந்தும் அதனை அணைப்பதற்காக வீதியில் இறங்கியவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

யாழ் மாநகரசபையினால் அனுப்பப்பட்ட தீயணைப்பு வண்டிகளை கூட தடுத்து நிறுத்திய   காடையர்கள்  நூலகம் முற்றாக எரிந்து சாம்பலான பின்னரே அந்த இடத்தை விட்டு அகன்றனர் என்பதும் அந்த நாளின் பதிவுகள் எமக்கு தெரிவிக்கின்ற விடயங்கள்.

அன்று இடம்பெற்றது திட்டமிடப்பட்ட ஓரு அழிப்பு –

தேசிய இனத்திற்கான அடையாளங்களில் அதன் கலாச்சார தனித்துவம் முக்கியமானது.அதனை வெளிக்காட்டி நிற்பவற்றில் நூலகங்களும் பிரதானமாவை

யாழ் நூலகம் தமிழ் மக்களின் பெருமை தன்மானம்அறிவு கலாச்சார செழிப்பு என்பவற்றிற்கான அடையாளம்.தமிழ் மக்கள் தனித்துவமான அடையாளங்களை கொண்ட தேசிய இனம் என்பதற்கான பெரும் சான்று.

அதனை சிங்கள பேரினவாதம் குறிவைத்ததற்கும் காரணம் அதுவே.

ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளிற்கான குரல்கள் தீவிரமடையத் தொடங்கியிருந்த அந்த நாட்களில் தமிழ் மக்கள்  தங்கள் அடையாளங்கள் பெருமிதம் கொள்ளும் விடயங்களை அழித்தொழிப்பதன் மூலம் - தமிழ் மக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் அவர்களை அடிபணிய வைக்கலாம்- என நினைத்து செயற்பட்டது பேரினவாதம்.

அந்த கொடுஞ்செயல் தமிழர் நெஞ்சங்களை பெருந்தீயாக சுட்டது- காயப்படுத்தியது உண்மை.

ஆனாலும் அதனையும் மீறி தமிழ் மக்கள் தங்கள் கலாச்சார செழுமையை பாதுகாக்கவும்மேலும் வளப்படுத்தவும் திடசங்கற்பம் பூண்டனர் என்பதும் அதில் வெற்றி கண்டனர் என்பதும் உண்மை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

38 நிபந்தனைகளை மாத்திரம் நிறைவேற்றியுள்ள இலங்கை...

2023-09-27 14:40:25
news-image

ஒடுக்குமுறை நீடித்து நிலைக்கக்கூடிய ஒரு தெரிவு...

2023-09-27 13:42:35
news-image

நிகழ்நிலைக் காப்பு ஆணைக்குழுச் சட்டமூலம் “ஜனாதிபதியின்...

2023-09-27 11:41:14
news-image

சுற்றுலா மற்றும் பசுமை முதலீடுகள் ;...

2023-09-26 19:45:02
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் உலக சுற்றுலா தினநிகழ்வுகள் 

2023-09-26 17:30:26
news-image

எதிர்கால இயற்கை பாதுகாப்பை சிதைக்கும் அபிவிருத்தி...

2023-09-26 15:00:53
news-image

இத்தாலியின் வெளியேற்றத்தால் தகர்ந்து போகும் சீனாவின்...

2023-09-26 11:09:20
news-image

இணையத்தை வேகமெடுக்க வைக்கும் எலனின் திட்டத்திற்காக...

2023-09-25 21:57:42
news-image

நீதிக்கான மன்றாட்டமும்  வாயால் வடை சுடுதலும்

2023-09-25 12:30:48
news-image

மேற்கு ஆபிரிக்காவில் சூழும் போர் மேகம்...

2023-09-25 11:43:22
news-image

பசும்பால் விற்க இடையூறு : மதுபானசாலைகளுக்கு...

2023-09-25 11:02:40
news-image

மறுக்க முடி­யாத உரிமை

2023-09-24 19:45:52