கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் வத்தளை லைசியம் 2 புதிய சாதனைகளுடன் 31 பதக்கங்கள்

Published By: Digital Desk 5

31 May, 2023 | 09:59 AM
image

(நெவில் அன்தனி)

ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் (இலங்கை மெய்வல்லுநர்) நிறுவனத்தினால் அண்மையில் நடத்தப்பட்ட 63ஆவது கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை வீர, வீராங்கனைகள் 2 புதிய போட்டி சாதனைகளுடன் 12 தங்கம், 12 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்து அசத்தினர்.

பிரமிக்கவைக்கும் திறமை, விடாமுயற்சி, அசைக்க முடியாத உறுதியுடன் இப் போட்டியில் பங்குபற்றிய வீர, வீராங்கனைகள் தங்களது அதிசிறந்த ஆற்றல்கள் மூலம் பதக்கங்களை வென்று தங்களுக்கும் பாடசாலைக்கும் பெருமையையும் புகழையும் ஈட்டிக்கொடுத்தனர்.

வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை சார்பாக 30க்கும் மேற்பட்ட மெய்வல்லுநர்கள் பங்குபற்றியதுடன் அவர்களில் இருவர் புதிய போட்டி சாதனைகளை நிலைநாட்டி பலத்த பாராட்டைப் பெற்றனர்.

16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் தாருஷ மெண்டிஸ் 1.94 மீற்றர் உயரம் தாவி புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 12.58 செக்கன்களில் தனஞ்சனா பெர்னாண்டோ நிறைவு செய்து புதிய போட்டி சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இவர் மற்றொரு நிகழ்ச்சியிலும் தங்கம் வென்றார்.

தங்கப் பதக்கம் வென்றவர்கள் (ஆண்கள்)

16இன் கீழ்: தாருஷ மெண்டிஸ் (உயரம் பாய்தல் - 1.94 மீற்றர் - புதிய சாதனை)

சத்தியமூர்த்தி அபிலேஷ்கர் (முப்பாய்ச்சல் - 12.98 மீற்றர்)

20இன் கீழ்: ஜெரில் பிலிப்ஸ் (தட்டெறிதல் - 42.69 மீற்றர்)

23இன் கீழ்: யேஷான் குமார (முப்பாய்ச்சல் - 15.74 மீற்றர்)

(பெண்கள்)

16இன் கீழ்: ஷேஷா உமாயா ரத்நாயக்க (நீளம் பாய்தல் - 5.47 மீற்றர்)

தனஞ்சனா பெர்னாண்டோ (100 மீற்றர் - 12.5 செக். - புதிய சாதனை, 200 மீற்றர் - 25.9 செக்.)

18இன் கீழ்: ஜித்மா விஜேதுங்க (200 மீற்றர் - 25.2 செக்., 400 மீற்றர் - 57.9 செக்.)

20இன் கீழ்: இசாலி மல்கேத்மி (குண்டு எறிதல் - 11.32 மீற்றர், தட்டெறிதல் - 31.61 மீற்றர்)

செத்மி கௌஷிகா (3000 மீற்றர் - 11 நி. 22 செக்.)

வெள்ளிப் பதக்கங்கள் வென்றவர்கள் (ஆண்கள்)

16இன்கீழ்: சேனுஜ விதுன் தசநாயக்க (தட்டெறிதல் - 39.81 மீற்றர்)

ரெஹான் பெரேரா (800 மீற்றர் - 2 நி. 03.60 செக்)

18இன் கீழ்: செனுர ஹன்சக்க சந்தீப்ப (முப்பாய்ச்சல் - 13.75 மீற்றர்)

அஞ்சன ப்ரபாஷ்வர (110 மீற்றர் சட்டவேலி ஓட்டம் - 15.09 செக்.)

ரிசந்து பண்டார (தட்டெறிதல் - 38.99 மீற்றர்)

20இன் கீழ்: தினேத் அனுஹாஸ் (உயரம் பாய்தல் - 2.1 மீற்றர்)

சந்துன் கோசல (110 மீற்றர் சட்டவேலி ஓட்டம் - 14.44 செக்.)

23இன் கீழ்: யேஷான் குமார (நீளம் பாய்தல் - 7.55 மீற்றர்)

(பெண்கள்)

16இன் கீழ்: ஷேஷா உமாயா ரத்நாயக்க (100 மீற்றர் - 12.65 செக்., 200 மீற்றர் - 26.0 செக்.)

18இன் கீழ்: ரஷினி கருணாரத்ன (400 மீற்றர் சட்டவேலி ஓட்டம் - 1 நி. 07.22 செக்)

20இன் கீழ்: ஷ ஷினி டில்ஷா (400 மீற்றர் சட்டவேலி ஓட்டம் - 1 நி. 08.05 செக்.)

வெண்கலப் பதக்கம் வென்றவர்கள் (ஆண்கள்)

18இன் கீழ்: தஹாம் திசாநாயக்க (உயரம் பாய்தல் - 1.85 மீற்றர்)

ஹேஷான் துலஞ்சன (முப்பாய்ச்சல் - 13.74 மீற்றர்)

20இன் கீழ்: ஏஞ்சலோ பெனடிக்ட் (1500 மீற்றர் - 4 நி. 11.61 செக்.)

(பெண்கள்)

18இன் கீழ்: சந்துனி குலரத்ன (உயரம் பாய்தல் - 1.55 மீற்றர்)

ஷெலோமி ரஷினி (400 மீற்றர் சட்டவேலி ஓட்டம் - 1 நி. 07.69செக்.)

20இன் கீழ்: செத்மி கௌஷிக்கா (1500 மீற்றர் - 5 நி. 01.20 செக்.)

கவீஷா விக்கரமரட்ன (உயரம் பாய்தல் _ 1.61 மீற்றர்)

வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை பயிற்றுநர்களின் தளராத ஆதரவும் வழிகாட்டலுமே இந்த வெற்றிகளுக்கு முக்கிய காரணமாகும்.

மெய்வல்லுநர்களுக்கான தலைமைப் பயிற்றுநர் லலித் சில்வா, பிரதி தலைமை பயிற்றுநர் கமல் பண்டார மற்றும் பயிற்றுநர்கள் அநுராத, ஹேர்ஜினஸ், தமித்தா அத்துகோரள, நிப்புன நிர்மல், அமில ப்ரசன்ன, ஒகஸ்டின் அப்புஹாமி, துமிந்த ப்ரசாத், ஜீவன ப்ரசாத் ஆகியோர் இளம் விளையாட்டு வீரர்களை உண்மையான சம்பியன்களாக பிரகாசிக்கச் செய்ய அயராது உழைத்தனர். வீரர்களின் அர்ப்பணிப்பத்தன்மையும் விடாமுயற்சியும் அவர்களை சிறந்த மெய்வல்லுநர்களாக தரம் உயர்த்திவிட்டுள்ளதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.

வீர, வீராங்கனைகளின் ஆற்றல்களை பொறுப்பாசிரியர் ப்ரதீப் நுகேகொட, அமலி தேவநாராயண, ஸ்டெஃபானி ரூக்ஸ் ஆகியோர் பெரிதும் பாராட்டினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆசிய விளையாட்டு விழா : கிரிக்கெட்டில்...

2023-09-25 15:20:39
news-image

ஆசிய ஒலிம்பிக் பேரவை கொடியின் கீழ்...

2023-09-25 11:40:58
news-image

உலகக் கிண்ண அணியில் ஹசரங்க, சமீர...

2023-09-25 10:49:38
news-image

வெளிமாவட்ட பெண்கள் பாடசாலைகளில் 3ஆம் இடம்பெற்று...

2023-09-25 10:30:29
news-image

மெக்ஸ்வெல் 2010இல் முன்வைத்த யோசனைக்கு அமைய...

2023-09-25 10:46:37
news-image

கில், ஐயர், யாதவ் துடுப்பாட்டத்தில் அசத்தல்,...

2023-09-25 09:54:57
news-image

ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு தங்கம்...

2023-09-25 07:01:59
news-image

ஆசிய விளையாட்டு விழாவை சீன ஜனாதிபதி...

2023-09-24 06:49:46
news-image

ஷமி 5 விக்கெட் குவியல், நால்வர்...

2023-09-23 10:53:17
news-image

19ஆவது ஆசிய விளையாட்டு விழா சினாவின்...

2023-09-23 10:25:11
news-image

அருணாச்சலப் பிரதேச வீராங்கனைகளுக்கு சீனா விசா...

2023-09-23 09:42:09
news-image

ஐ.சி.சி. உலகக் கிண்ண சம்பியனுக்கு பணப்பரிசு...

2023-09-23 09:41:43