(நெவில் அன்தனி)
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 16 வீரர்களைக் கொண்ட இலங்கை குழாத்தில் டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரட்ன, முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் ஆகியோரும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் விளையாட நிர்பந்திக்கப்பட்டுள்ள இலங்கை அணி அதற்கு முன்னதாக எதிர்கொள்ளும் ஆப்கானிஸ்தானுடனான தொடர் இலங்கைக்கு பலப்பரீட்சையாக அமையவுள்ளது.
தசுன் ஷானக்க வழமைபோல் அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுத் கருணாரட்ன கடைசியாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நோர்த் சவுண்ட் விளையாட்டரங்கில் 2021 மார்ச் 14ஆம் திகதி விளையாடியிருந்தார். அதன் பின்னர் ஒரு நாள் குழாத்தில் அவர் இடம்பெறுவது இதுவே முதல் தடவையாகும். அவர் பெரும்பாலும் ஆரம்ப வீரராக விளையாடுவார் என நம்பப்படுகிறது.
இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மிகத் திறமையாக பந்துவீசி 19 விக்கெட்களைக் கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண முதல் தடவையாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் கடந்த வருடம் நடைபெற்ற ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின்போது உபாதைக்குள்ளாகி சிகிச்சையுடன் ஓய்வுபெற்றுவந்த இலங்கையின் பிரதான வேகப்பந்துவீச்சாளர் துஷ்மன்த சமீர மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
29 வயதான சகலதுறை வீரர் துஷான் ஹேமன்த முதல் தடவையாக இலங்கை குழாத்தில் இடம்பெறுகின்றமை மற்றொரு விடேச அம்சமாகும். உள்ளூர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 1000க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்துள்ள தூஷான் ஹேமன்த, 64 விக்கெட்களையும் கைப்பற்றி தனது சகலதுறை ஆட்டத்திறனை வெளிப்பத்தியதை அடுத்தே இலங்கை குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
சுழல்பந்துவீச்சு சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க டி சில்வா, அண்மையில் இண்டியன் பிறீமியர் லீக் போட்டியின்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். எனினும் அவரது பெயர் குழாத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இலங்கை குழாம்
தசுன் ஷானக்க (தலைவர்), பெத்தும் நிஸ்ஸன்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ் (உதவித் தலைவர் - விக்கெட் காப்பாளர்), ஏஞ்சலோ மெத்யூஸ், சரித் அசலன்க, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம (விக்கெட் காப்பாளர்), சாமிக்க கருணாரட்ன, துஷான் ஹேமன்த, வனிந்து ஹசரங்க டி சில்வா, லஹிரு குமார, துஷ்மன்த சமீர, கசுன் ராஜித்த, மதீஷ பத்திரண, மஹீஷ் தீக்ஷன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM