இருவரை கொலை செய்த குற்றவாளிக்கு மரணதண்டனை - இளஞ்செழியன் தீர்ப்பு

Published By: Vishnu

30 May, 2023 | 05:18 PM
image

வவுனியா சமளங்குளம் பகுதியில் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வீடொன்றினுள் புகுந்து இருவரை கொலை செய்து கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

வவுனியா சமளங்குளத்தில் 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வீடொன்றினுள் புகுந்து அங்கிருந்த இருவரை சுட்டுக்கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்ட 24 வயது நபரொருவருக்கெதிராக 11 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் தற்போது 38 வயதாகும் குறித்த நபருக்கு செவ்வாய்க்கிழமை (30) வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனால் 9 குற்றச்சாட்டுகளுக்கு 16 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டதுடன் 10,000 ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டது.

தண்டப்பணம் செலுத்த தவறும் பட்சத்தில் இரண்டு மாதம் கடூழிய சிறைத்தண்டனையும் வழங்கிய நீதிபதி 10 ஆம் மற்றும் 11 ஆம் குற்றச்சாட்டுகளுக்கு மரணதண்டனையும் வழங்கி தீர்ப்பளித்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

68 ஆயிரத்தைக் கடந்தது டெங்கு நோயாளர்களின்...

2026-07-13 01:12:26
news-image

பெரும்பாலான பகுதிகளில் மழை; வடக்கு, கிழக்கில்...

2026-07-13 01:10:09
news-image

நம்பிக்கையில்லாப் பிரேரணையால் எந்தப் பயனும் இல்லை...

2026-07-12 15:08:42
news-image

நாட்டில் எந்தவொரு பௌத்த துறவியாவது பிரபாகரனுடன்...

2026-07-12 13:50:12
news-image

நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு முயற்சி...

2026-07-12 16:11:28
news-image

நீர்கொழும்பு சிறை மோதலுக்கு பொறுப்பேற்று நீதி...

2026-07-12 16:12:40
news-image

சிறைச்சாலை கைதிகளால் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட...

2026-07-12 14:00:45
news-image

கட்டாய உழைப்பு உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு...

2026-07-12 16:45:01
news-image

2027 நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம்...

2026-07-12 16:51:31
news-image

காலநிலை மாற்றங்களை தேசிய பாதுகாப்பு பிரச்சினையாக...

2026-07-12 16:53:25
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தன்மை வரலாற்றில் என்றுமில்லாதவாறு வீழ்ச்சி...

2026-07-12 17:08:19
news-image

நல்லூர், மடு திருவிழாக்களுக்கு சிறப்பு போக்குவரத்து...

2026-07-12 21:48:41