சட்டத்தரணியாக பணிபுரிந்த பெண்ணின் கரங்களில் ஆயுதம் ; இதுதேசத்திற்காக போராடும் உக்ரேனின் ஆட்டிலறி படைப்பிரிவின் பெண் அதிகாரியின் கதை

Published By: Rajeeban

30 May, 2023 | 04:27 PM
image

உக்ரைன் மீதான ரஸ்யாவின் முழுமையான யுத்தத்தி;ற்கு முன்னர் ஒல்கா பிகார் உக்ரைன் நிறுவனமொன்றிற்காக சட்டத்தரணியாக பணியாற்றிக்கொண்டிருந்தார்,தனது கலாநிதி பட்டப்படிப்பைதொடர்ந்துகொண்டிருந்தார்.

15மாதங்களிற்கு பின்னர் அவர் தற்போது உக்ரைனின் மோட்டார் ஆட்டிலறி படைப்பிரிவொன்றின் தளபதியாக போரில்ஈடுபட்டுள்ளார்.

பக்முத்தில்போரில் ஈடுபட்டுள்ளஇவரை விட்ச் என அழைக்கின்றனர்.

இந்த பெயரிற்கான காரணங்கள் உக்ரைன்  பதில் தாக்குதலை எப்போது மேற்கொள்ளும்என்ற  தகவல் போல இரகசியமானதாக  காணப்படுகின்றது.

எனது இலக்கம் 2014 அதுபற்றிய கதையை தெரிவிப்பதற்கு முன்னர்  நான் ஆனால் யுத்தத்தின் பின்னர் என அவர் கிழக்கு உக்ரைனில் இடம்பெறும் இரகசியஆயுத பயிற்சி;யின் இடைவேளையில் ஏபிசிக்கு தெரிவித்தார்.

பக்முத்திற்கான போரில்கடந்தஐந்து மாதங்களாக முன்னரங்கபடைப்பிரிவில் ஒருவராக ஒல்கா போரிடுகின்றார்,21ம்நூற்றாண்டின் இரத்தக்களறி மிக்க மோதலில் அவர் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்- கடந்தகாலங்களில் உங்கள் வாழ்க்கையை பற்றி கற்றுக்கொடுக்கப்பட்ட அனைத்து விடயங்களும் முக்கியமானவையில்லைஎன்பதை பக்முத்தில் உணர்வதாகஅவர்தெரிவிக்கின்றார்.

கட்டிடங்களும் வீடுகளும் வெடித்துச்சிதறுவதை நீங்கள் பார்;க்கின்றீர்கள் அந்த நிமிடத்தில் பணம் கார் சொத்துக்களை விட வேறு முக்கியமான ஏதோ ஒன்று உள்ளது என்பதை நீங்கள் உணர்வீர்கள்என்கின்றார்அவர்.

எங்களிற்கு மிக முக்கியமான விடயங்கள் - சுதந்திரம், ஜனநாயகம் சட்டம் என்கின்றார்அவர்.

ரஸ்ய படையினருக்கு எதிராக ஆட்டிலறிதாக்குதல்களை மேற்கொள்ளும் அதேவேளை அவர் முன்னரங்கிலிருந்து டிக்டொக்கில் வீடியோக்களை பதிவிடுகின்றார்.

இளம் தாய் எப்படி போர்வீராங்கனையாக  மாறினார்.

பெப்ரவரி 24 ம் திகதி ஒல்கா உக்ரைன் தலைநகரை தாக்கும் எறிகணை சத்தத்துடன் கண்விழித்தார்.

அவர் தனது 18 வயது சகோதரனின்  அறைக்குள் சென்று அவர்நகரிலிருந்து வெளியேற விரும்புகின்றாரா என கேள்விஎழுப்பினார்.

சகோதரர் இல்லை நான் நாட்டை பாதுகாக்க  போரிட விரும்புகின்றேன் என தெரிவித்தார்.

மறுநாள் ஒல்காவும் தாயாரும் அவரது சகோதரனும் உக்ரைன்படையணியில் இணைவதற்காக  நீண்ட வரிசையில் இணைந்து கொண்டனர்.

அவரது தாயாரும் சகோதரரும் தற்போது மருத்துவபிரிவில் பணிபுரிகின்றனர்.

உக்ரைனின் மிகவும் எதிர்பார்க்கப்படும்பதில்தாக்குதலிற்கு தயாராகிவரும் வேளையில் ஒல்கா தனது ஏழு வயது மகனின் எதிர்காலத்திற்காக போராடுவதாக தெரிவிக்கின்றார்.

அவரது மகன் கடந்த 15 மாதங்களாக வெளிநாடொன்றில் உறவினர் ஒருவருடன் வாழ்கின்றார்,ரஸ்யா தாக்குதலை ஆரம்பிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே தாக்குதல்இடம்பெறலாம் என்ற தகவல்கிடைத்துவிட்டது ஆகவே நான்டிக்கெட்களை வாங்கி எனது மகனை அனுப்பிவைத்தேன் பாதுகாப்பான இடத்திலிருப்பது சிறந்த விடயம் என தெரிவித்தேன் என்கின்றார் வொல்கா.

நண்பர்கள் பாடசாலை போன்றவற்றை விட்டு விட்டு செல்வது அவருக்கு கடிதமான விடயம் நான் தொலைபேசியில் தொடர்புகொள்ளும்போது அம்மா எப்போதுநான் வீட்டிற்கு வரலாம் என அவர் கேட்கின்றார் என்கின்றார் வொல்கா.

நான்அவரிடம் இன்னும் சிறிது காலத்தில் உக்ரைன் வரலாம் என தெரிவிப்பேன் என்கின்றார் வொல்கா .

மகன் வெடிப்புச்சத்தங்களை ஒருபோதும் கேட்டதில்லை எச்சரிக்கைஅலாரம்களை ஒருபோதும் கேட்டதில்லை இது குறித்து எனக்கு மகிழ்ச்சி ஏனென்றால்இது அவரது உளநலத்திற்கு முக்கியமானவிடயம் எனவும்அவர் குறிப்பிடுகின்றார்.

தனது மகனிடமிருந்துதனித்து வாழும்தியாகத்தை ஏன் தெரிவு செய்தேன் என்பதை அவர் தெளிவுபடுத்துகின்றார்-யுத்த ஆரம்பிப்பதற்கு முன்னரே அவரது இளைய சகோதரருக்கு சட்டப்;படிப்பை தொடர்வதற்கான புலமைப்பரிசில் கிடைத்தது,ரஸ்யா எங்கள் நாட்டிற்குள் வந்தால் நாங்கள் சட்டம் படிக்க வேண்டிய  அவசியமில்லை இதனால் நான் சட்டம் படிக்கவில்லை என அவர் தெரிவித்தார் என்கின்றார் வொல்கா

ஆகவே நாங்கள் எங்கள் நாட்டை பாதுகாக்கவேண்டும் அதன் பின்னர் எதிர்காலத்தை பற்றி சிந்திக்கலாம் என்கின்றார் அவர்.

பக்முத் மோதல்களத்தில்

பக்முத் மோதல்களத்தில் நீண்ட பகல்கள் இரவுகளில் அவர் எதிரியை அறிந்துகொண்டுள்ளார்.

பக்முத்தில் நாங்கள் ரஸ்யாவின் உண்மையான முகத்தைபார்த்துள்ளோம் கொலைகாரனின் முகத்தை பார்த்துள்ளோம்  ஈவிரக்கமற்ற நடவடிக்கைகளை பார்த்துள்ளோம் என்கின்றார்  வொல்கா .

241 வது படையணியின்ஒரு பகுதியாக செயற்படும்அவரது பிரிவு வோக்னர் கூலிப்படைக்கு எதிராகவும் ரஸ்யாவின் ஏனைய பட்டாலியன்களிற்கு எதிராகவும். போரிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இணையத்தை வேகமெடுக்க வைக்கும் எலனின் திட்டத்திற்காக...

2023-09-25 21:57:42
news-image

நீதிக்கான மன்றாட்டமும்  வாயால் வடை சுடுதலும்

2023-09-25 12:30:48
news-image

மேற்கு ஆபிரிக்காவில் சூழும் போர் மேகம்...

2023-09-25 11:43:22
news-image

பசும்பால் விற்க இடையூறு : மதுபானசாலைகளுக்கு...

2023-09-25 11:02:40
news-image

மறுக்க முடி­யாத உரிமை

2023-09-24 19:45:52
news-image

ஜனா­தி­ப­தியின் அதிகப் பிர­சங்­கித்­தனம்

2023-09-24 19:46:10
news-image

தனி வழி செல்­வ­தற்கு கள­ம­மைக்கும் பஷில்

2023-09-24 19:46:51
news-image

பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒத்துழைப்பை வலியுறுத்தும் ஆசிய...

2023-09-24 19:47:49
news-image

ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களின் பண ...

2023-09-24 19:48:27
news-image

வளர்ந்து வரும் ஆப்பிரிக்க சக்திகளின் எழுச்சி

2023-09-24 19:53:55
news-image

ஒஸ்லோ உடன்படிக்கையும் மரணித்துவிட்டது

2023-09-24 19:54:17
news-image

இந்­திய - கனே­டிய இரா­ஜ­தந்­திர முறுகல்...

2023-09-24 15:36:36