யாழில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

Published By: Digital Desk 3

30 May, 2023 | 04:21 PM
image

யாழ். மாவட்டத்தில் வீதி விபத்துக்களை தடுக்க புதன்கிழமை (31) முதல் விசேட வேலைத்திட்டத்தினை  முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் மஞ்சுள செனரத்ன தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவது தொடர்பில், இன்று செவ்வாய்க்கிழமை  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாணத்தில் இந்த மாதம் 29ஆம் திகதி வரையிலான 29 நாட்களில் வீதி விபத்துகளில் 10ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதனால் வீதி விபத்துக்ளை கட்டுப்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்துமாறு , யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். 

அதனால் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். 

யாழ்ப்பாண நகர் பகுதியில் காங்கேசன்துறை வீதி, வைத்தியசாலை வீதி, ஸ்ரான்லி வீதி ஆகிய வீதிகளில் விதிமுறைகளை மீறி வாகனங்களை நிறுத்துதல் அதிகரித்துள்ளன. 

அதனால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுவதுடன் விபத்துக்களும் ஏற்படுகின்றன. அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அறிவுறுத்தியுள்ளேன். 

எனவே புதன் கிழமை முதல் யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக அனைத்து பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பிரிவினரும் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளனர். 

எனவே பொது மக்கள் , சாரதிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து வீதி விபத்துக்களில் இருந்து தங்களையும் , வீதியில் செல்வோர்களையும் பாதுகாத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை கதைப்பதற்கு ஜீவன்...

2025-02-06 18:54:04
news-image

தேசியக் கொடியை இறக்கிவிட்டு கறுப்புக் கொடியை...

2025-02-06 19:11:23
news-image

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையில் மாற்றமில்லை தற்போதைய...

2025-02-06 16:24:53
news-image

சர்ச்சைக்குரிய கிரிஷ் கட்டிடத்தில் தீ

2025-02-06 21:41:18
news-image

பரிசோதனை செய்யப்படவேண்டிய கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவித்தமைக்கு...

2025-02-06 19:10:02
news-image

சேறு பூசலை பிரத்தியேக நாமமாக பயன்படுத்த...

2025-02-06 17:18:25
news-image

பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2025-02-06 16:48:03
news-image

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச்...

2025-02-06 20:52:31
news-image

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும்...

2025-02-06 20:42:13
news-image

''நடுவே பாய வேண்டாம்'' பிரதி சபாநாயகரை...

2025-02-06 19:11:52
news-image

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில்...

2025-02-06 14:33:26
news-image

புதிய முப்படைத் தளபதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர் 

2025-02-06 19:24:44