(எம்.எம்.சில்வெஸ்டர்)
மலேஷியாவில் நடைபெற்ற மலேஷிய மாஸ்டர்ஸ் சர்வதேச பெட்மிண்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில்இந்தியாவின் எச்.எஸ். பிரனோயும், பெண்கள் பிரிவில் ஜப்பானின் அக்கனே யமாகுச்சியும் சம்பியன் பட்டம் வென்று அசத்தினர்.
மலேஷிய மாஸ்டர்ஸ் சர்வதேச பெட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனோய், சீனாவின் வெங் ஹொங்யாங்கை எதிர்கொண்டார்.
இப்போட்டியின் முதல் செட்டை 21க்கு19 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்ற பிரனோய் , 13 க்கு21 என்ற புள்ளிகள் கணக்கில் இரண்டாவது செட்டை இழந்தார்.
இதை அடுத்து, வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டை 21க்கு 18 என்ற புள்ளிகள் கணக்கில் வென்ற பிரனோய் மலேஷிய மாஸ்டர்ஸ் சர்வதேச பெட்மிண்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சம்பியன் பட்டத்தை பட்டத்தையும் கைப்பற்றினார்.
இதேவேளை, பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் அக்கனே யமாகுச்சி சம்பியனானார். இதன் இறுதிப் போட்டியில் இந்தோனேஷியாவின் கிரகெரியா மரிஸ்காவை 21க்கு 17, 21க்கு 07 என்ற புள்ளிகள் கணக்கில் இரண்டு நேர் செட்களையும் கைப்பற்றி சம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM