(எம்.மனோசித்ரா)
இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான சுங்க நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரத்துறையில் ஒத்துழைப்புக்கள் என்பவை தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சுங்க நடவடிக்கைகளுக்கு ஏற்புடைய ஒத்துழைப்புக்கள் , பரஸ்பர ஒத்துழைப்புக்களை பலப்படுத்துதல், ஊக்குவித்தல், மேம்படுத்தல் , இருதரப்பினர்களுக்கிடையேயான புரிந்துணர்வு மற்றும் தொடர்பாடலை வலுப்படுத்தும் நோக்கில், இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான சுங்க நடவடிக்கைகள் தொடர்பான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புக்கள் பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்காக வரைவாக்கம் செய்யப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை கையொப்பமிடுவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதேவேளை சுகாதார சேவைகளை மேம்படுத்தல், ஆராய்ச்சி, அபிவிருத்தி நடவடிக்கைகளை ஊக்குவித்தல், இருநாடுகளில் பொதுமக்களின் ஒட்டுமொத்த நல்லாரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் இருநாடுகளுக்கிடையில் சுகாதாரத் துறையில் ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்தல் மற்றும் முறைமைப்படுத்தல் போன்ற நோக்கங்களுக்காக மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுகாதாரத் துறையின் ஒத்தழைப்புக்கள் பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM