(எம்.எம்.சில்வெஸ்டர்)
இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் புதிய பொதுச் செயலாளராக சமன் குமார குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இலங்கை மெய்வல்லுநர் விளையாட்டு துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேல் உத்தியோகபூர்வ புள்ளிவிபரவியல் பதிவாளராக சேவையாற்றியுள்ளவர் ஆவார்.
கடந்த 25 ஆம் திகதியன்று விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் நடைபெற்ற இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் பொதுக்கூட்டத்தின்போது, சமன் குமார குணவர்தன புதிய பொதுச் செயலாளராக ஏகமனதாக போட்டியின்றி தெரிவானார்.
இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் பொதுச் செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்து வந்த பிரேமா பின்னவல, கடந்த பெப்ரவரி மாதம் பதவி விலகியிருந்தார்.
இதை அடுத்து, பிரதி செயலாளராக பதவி வகித்து வந்த பாலித்த ஜயதிலக்க தற்காலிக செயலாளராக பதவி வகித்து வந்த நிலையிலேயே, தற்போது புதிய பொதுச் செயலாளராக சமன் குமார குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM