பொதுமக்களின் உதவியைகோரும் பொலிஸார் ! இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் அறிவியுங்கள் !

Published By: Digital Desk 5

30 May, 2023 | 12:49 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெஸ்லி ரணகல மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையசந்தேக நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தேடப்படும் சந்தேக நபர் தொடர்பில் தகவல்களைப் பெறுவதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

கடந்த 20 ஆம் திகதி  மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் நபர் ஒருவர் மீது டி-56 துப்பாக்கியால் துப்பாக்கி பிரயோகம்  மேற்கொள்ளப்பட்டது. 

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இருப்பினும் மேற்படி புகைப்படத்திலுள்ள அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று  தலைமறைவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சந்தேக நபர்  33 வயதுடைய நபர் கொத்தடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் இடது கை மணிக்கட்டில் இருந்து மேல் நோக்கி பறவையின் இறகு போன்ற  கருப்பு நிறத்தில் பச்சை குத்தியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால்  பணிப்பாளர் கொழும்பு குற்றப் பிரிவு - 071 859 1733,  நிலைய பொறுப்பதிகாரி கொழும்பு குற்றப் பிரிவு - 071 85917335, நிலைய அதிகாரி விசாரணை பிரிவு 1 - 071 8596503  தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30