‘எல். ஜி. எம்' படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

Published By: Ponmalar

30 May, 2023 | 12:37 PM
image

இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'எல். ஜி. எம்' எனும் திரைப்படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. விரைவில் இப்படத்தின் டீசர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் 'எல். ஜி. எம்'. (லெட்ஸ் கெட் மேரீட்). இந்தத் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைத்திருக்கிறார். காதலையும், குடும்பத்தையும் மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தோனி என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விகாஸ் ஹஸிஷா தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை திருமதி சாக்ஷி தோனி வழங்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் குடும்ப உறுப்பினர்களுடன் நாயகனான ஹரிஷ் கல்யாண் வாகனம் ஒன்றில் பயணம் மேற்கொள்வது போல் உருவாக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களின் பேராவத்தைத் தூண்டுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35