“வீரன் திரைப்படத்தில் சுப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக, குதிரை ஏற்றம், சண்டை பயிற்சி.. என நிறைய விடயங்களை கற்றுக் கொண்டேன்.
இப்படத்தில் நான் நடித்ததை விட கற்றுக் கொண்டது அதிகம்” என அப்பட நாயகனான ஹிப் ஹொப் தமிழா ஆதி தெரிவித்திருக்கிறார்.
'மரகத நாணயம்' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஏ. ஆர். கே. சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'வீரன்'. இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹொப் தமிழா ஆதி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை புதுமுக நடிகை ஆதிரா ராஜ் நடித்திருக்கிறார். இவர்களுடன் வினய் ராய், காளி வெங்கட், முனீஸ் காந்த், போஸ் வெங்கட், சின்னி ஜெயந்த், முருகானந்தம், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தீபக் டி மேனன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹொப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார். கிராமிய சுப்பர் ஹீரோவை முன்னிறுத்தி தயாராகி இருக்கும் இந்த 'வீரன்' திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் என்னும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி. ஜி. தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன், செந்தில் தியாகராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
ஜூன் இரண்டாம் திகதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதன்போது நாயகன் ஹிப் ஹொப் ஆதி தமிழா, நாயகி ஆதிரா ராஜ், நடிகர்கள் வினய் ராய், காளி வெங்கட், முருகானந்தம், சசி செல்வராஜ், இயக்குநர் ஏ ஆர் கே சரவணன் மற்றும் பட குழுவினர் பங்குபற்றினர்.
இதன் போது படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், “நான்கு ஆண்டுகளுக்கு முன் இப்படத்தின் கதைக்கு இசையமைப்பதற்காக ஹிப் ஹொப் ஆதி தமிழாவிடம் கூறினேன். அதன் பிறகு சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தினர் இக்கதையை கேட்டு தயாரிக்க முன் வந்ததும், கதையின் நாயகனாக நடிக்க ஹிப் ஹொப் ஆதி தமிழா ஒப்புக்கொண்டார். கிராமத்து சிறு தெய்வங்களை நாயகனாக்கி ஃபேண்டஸி ஜேனரில் நகைச்சுவை கலந்து சுப்பர் ஹீரோ திரைப்படமாக உருவாக்கி இருக்கிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் படமாளிகைக்குச் சென்று ரசிக்கும் வகையில் படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறோம்” என்றார்.
படத்தின் நாயகனான ஹிப் ஹொப் தமிழா ஆதி பேசுகையில், “எத்தனை ஹொலிவுட் சுப்பர் ஹீரோக்கள் வந்தாலும்.. எமக்கு சக்திமான் தான் சுப்பர் ஹீரோ. இந்த திரைப்படத்தின் கதையை இயக்குநர் நான்கு ஆண்டுகளுக்கு முன் எம்மிடம் சொல்லி இசையமைக்குமாறு கேட்டுக் கொண்டார். தயாரிப்பாளரும், நண்பருமான அர்ஜுன் தியாகராஜன் இப்படத்தின் கதையைக் கேட்டு, நடிக்க சம்பந்தமா? எனக் கேட்டவுடன், இயக்குநரிடம் இந்த கதையை ஏற்கனவே கேட்டதால், நடிக்க சம்மதம் தெரிவித்தேன். இந்த திரைப்படத்தின் நாயகன் சுப்பர் ஹீரோ என்பதால் அதற்கேற்ற வகையில் சண்டைக் காட்சிகள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது. இதற்காக குதிரையேற்றம், சண்டை பயிற்சி ஆகியவற்றை பிரத்யேக பயிற்சியாளர்கள் மூலம் ஆறு மாத காலம் கற்றுக் கொண்டேன். ஒரு ஃபேண்டஸி கொமடி திரைப்படத்தின் படப்பிடிப்பு தளம் உற்சாகமாக இருப்பதை கண்டு வியந்து, அதில் பணியாற்றும் கலைஞர்களின் பங்களிப்பையும் கண்டேன். இப்படத்தின் மூலம் பல நுட்பமான விடயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்தத் திரைப்படம் ஜூன் இரண்டாம் திகதி படமாளிகைகளில் வெளியாகிறது. அனைவரும் குடும்ப உறுப்பினர்களுடன் திரையரங்குகளுக்கு சென்று கண்டு ரசிக்க வேண்டிய படைப்பு இது” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM