அஜித் குமாருக்கு ஜோடியாகிறாரா திரிஷா...!?

Published By: Ponmalar

30 May, 2023 | 12:34 PM
image

'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் குந்தவை நாச்சியாராக நடித்ததன் மூலம் மீண்டும் முன்னணி நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்ந்திருக்கும் நடிகை திரிஷா, அஜித்குமார் நடிப்பில் தயாராகவிருக்கும் 'விடாமுயற்சி' எனும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

நாற்பது வயதைக் கடந்த பிறகும்.. முகத்தில் இளமை தொலைந்த பிறகும்.. தான் ஏற்கும் கதாபாத்திரத்தில் தனித்துவமான நடிப்பை வழங்கி இன்றும் ரசிகர்களை வசப்படுத்தி வருகிறார் நடிகை திரிஷா.

2018 ஆம் ஆண்டில் '96', 2019 ஆம் ஆண்டில் 'பேட்ட', 2022 ஆம் ஆண்டில் 'பொன்னியின் செல்வன் 1', 2023 ஆம் ஆண்டில் 'பொன்னியின் செல்வன் 2' என ஆண்டிற்கு ஒரே ஒரு வெற்றி படமாவது அளித்து, தன் நட்சத்திர அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகை திரிஷா, தற்போது விஜய் நடிப்பில் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் 'லியோ' படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநரும், நடிகருமான மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகும் 'விடாமுயற்சி' எனும் திரைப்படத்திலும் அவர் நாயகியாக நடிக்க கூடும் என உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விஜய்- அஜித் ஆகியோரின் படங்களில் நடிப்பதால், நடிகை திரிஷா மீண்டும் இளம் தலைமுறை ரசிகர்களால் ரசிக்கப்படும் நாயகியாகி இருக்கிறார்.

இதனிடையே நடிகை திரிஷா, 'கிரீடம்', 'மங்காத்தா' ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து, மூன்றாவது முறையாக அஜித்குமாருடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்