நீரி­ழி­வைக் ­கட்­டுப்­ப­டுத்தும் கொய்யா

Published By: Robert

01 Jan, 2016 | 12:45 PM
image

கொய்­யாக்­க­னியின் சுவையை அறி­யா­த­வர்கள் யாரும் இருக்க முடி­யாது. மிகக் குறைந்த விலையில் அதிக சத்­துக்­களைத் தன்­ன­கத்தே கொண்ட பழம் ஆகும்.

கொய்­யாவில் பல­வ­கைகள் உள்­ளன. தற்­போது விற்­ப­னைக்கு வரும் பழங்­களில் உள் சதைப்­ப­குதி வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்­களில் காணப்படுகின்றன. ஒரு சில வகை கொய்­யாவின் சதைப்­ப­குதி இளச்சிவப்பு நிறத்தில் காணப்­படும். இவை அனைத்தினதும் மருத்­துவப் பயனும் ஒன்­றாகும். 

இதில் அதி­க­ளவு விட்­டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்­துள்­ளன. குறிப்­பாக நெல்­லிக்­க­னிக்கு அடுத்த நிலையில் விட்­டமின் சி சத்து கொண்ட பழம் கொய்­யா ஆகும்.

அனைத்து நோய்­களின் தாக்­கமும் மலச்­சிக்­கலில் இருந்­துதான் ஆரம்­பிக்கும். மலச்­சிக்­கலைப் போக்­கி­னாலே நோயில்லா நல்­வாழ்வு வாழலாம் என்­பது சித்­தர்­களின் கூற்று ஆகும். நன்கு கனிந்த கொய்யாப் பழத்தை இரவு உண­வுக்­குப்பின் சாப்­பிட்டு வந்தால் மலச்­சிக்கல் நீங்கும். குடலின் செரி­மான சக்தி அதி­க­ரிக்கும்.

தற்­போ­தைய உண­வு­களில் அதிகம் வேதிப் பொருட்கள் கலந்­தி­ருப்­பதால் அவை அஜீ­ர­ணத்தை உண்­டாக்கி வயிற்றுப் புண்ணை ஏற்­ப­டுத்­து­கி­றது. இதனைப் போக்க உண­வுக்­குப்பின் கொய்­யாப்­பழம் சாப்­பி­டு­வது மிக நல்­லது. மூல நோயின் பாதிப்பு உள்­ள­வர்கள் இப்­பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் மூல நோயி­லி­ருந்து விடு­ப­டலாம்.

கல்­லீ­ரலை பலப்­ப­டுத்த கொய்­யாப்­ப­ழத்தை அடிக்­கடி சேர்த்துக் கொள்­வது நல்­லது.

நீரி­ழிவு நோயா­ளி­க­ளுக்கு: நீரி­ழிவு நோயின் தாக்கம் கண்­டாலே அதை சாப்­பிடக் கூடாது இதை சாப்­பிடக் கூடாது என்ற கட்­டுப்­பா­டுகள் பாடாய்ப்­ப­டுத்தும். ஆனால் நீரி­ழிவு நோயா­ளி­க­ளுக்கு உண்­டாகும் பாதிப்­பு­களை குறைக்க கொய்­யாப்­பழம் உகந்­தது. மேலும் இரத்­தத்தில் சர்க்­க­ரையின் அளவை கட்­டுப்­ப­டுத்தும் தன்­மையும் உண்டு.

இரத்­தச்­சோகை மாறும்: இரத்­தத்தில் இரும்­புச்­சத்து குறை­வதால் இரத்­தச்­சோகை உண்­டா­கி­றது. கொய்­யாப்­பழம் இரத்­தச்­சோ­கையை மாற்றும் தன்மை கொண்­டது.

குழந்­தை­களின் வளர்ச்­சிக்கு: குழந்­தை­களின் வளர்ச்­சிக்கு தேவை­யான விட்­டமின் சி சத்து கொய்­யாப்­ப­ழத்தில் அதிகம் உள்­ளது. குழந்­தை­க­ளுக்கு அள­வோடு கொய்­யாப்­ப­ழத்தைக் கொடுத்து வந்தால் குழந்­தை­களின் எலும்­புகள் பலப்­படும். பற்கள் பல­ம­டையும். நல்ல வளர்ச்­சியைக் கொடுக்கும்.குழந்­தை­க­ளுக்கு அறி­வுத்­திறன் அதி­க­ரிக்கும். சொறி, சிரங்கு போன்ற சரும நோய்­களைக் குணப்­ப­டுத்தும் தன்மை கொய்­யா­வுக்கு உண்டு. நரம்­பு­களைப் பலப்­ப­டுத்தும். உடலின் உஷ்­ணத்தைக் குறைக்கும்.

கொழுப்பைக் குறைக்கும்: அதிக இரத்த அழுத்தம், அதிக கொழுப்பை குறைக்கும் தன்மை கொய்­யா­வுக்கு உண்டு. தினமும் இரண்டு கொய்­யாப்­பழம் உண்டு வந்தால் கொலஸ்ட்ரோல் குறையும் என இந்­திய இரு­தய ஆராய்ச்சி நிறு­வனம் ஆராய்ச்சி செய்து தெரி­வித்­துள்­ளது.

இதய படபடப்பு நீங்கும்: ஒரு சிலருக்கு சிறிது வேலை செய்தால் கூட இதயம் படபடப்பு உண்டாகிவிடும். உடலில் வியர்வை அதிகம் தோன்றும். இது இதய நோயின் அறிகுறியாகக்கூட அமையலாம். இந்த படபடப்பைக் குறைக்க கொய்யாப் பழம் மிகவும் உகந்தது. இதய படபடப்பு உள்ளவர்கள் தினம் ஒரு கொய்யாப்பழம் உண்பது நல்லது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உறக்கம் தொடர்பான கோளாறுக்குரிய நவீன சிகிச்சை

2025-06-17 16:02:55
news-image

ஒவேரியன் டெரடோமா எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2025-06-16 17:30:08
news-image

ரிலாப்சிங் பொலிகாண்ட்ரிடிஸ் எனும் அரிய பாதிப்பிற்குரிய...

2025-06-14 17:17:51
news-image

ஹைபோநெட்ரீமியா பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-06-10 19:06:52
news-image

நவீன சத்திர சிகிச்சைகளின் வகைகள் என்ன?

2025-06-09 17:38:05
news-image

லும்பர் ஸ்பைனல் ஸ்டெனோசிஸ் எனும் கீழ்ப்பக்க...

2025-06-07 20:35:08
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்புச் சக்தியை...

2025-06-06 18:22:59
news-image

மிட்ரல் வால்வு ஸ்டெனோசிஸ் எனும் இதய...

2025-06-05 17:22:20
news-image

களனி பல்கலைக்கழக ராகம மருத்துவப்பீடத்தில் புதிய...

2025-06-05 13:51:58
news-image

இன்ஹேலரை பாவித்தால் குருதி அழுத்தம் அதிகரிக்குமா?

2025-06-04 18:15:59
news-image

வெரிகோஸ் வெயின் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2025-06-02 16:05:50
news-image

பிறந்த பிள்ளைகளுக்கு ஏற்படும் மைலோமெனிங்கோசெல் பாதிப்பிற்குரிய...

2025-05-26 17:06:53