(எம்.எம்.சில்வெஸ்டர்)
காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக சில வாரங்கள் ஓட்டப் போட்டியில் பங்கேற்காமல் இருக்கப்போவதாக இலங்கை குறுந்தூர ஓட்ட வீரரான யுப்புன் அபேகோன் உறுதிப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக அவரின் கனவுப் போட்டிகளில் ஒன்றாக இருக்கும் டயமன்ட் லீக் ஓட்டப்போட்டியில் அவரால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தாலியின் சவோனாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த போட்டியை அடுத்து, காலில் சிறிய உபாதை ஏற்பட்டிருப்பதாக தனது உடல் நிலை குறித்து அறிக்கையில் யுப்புன் அபேகாகோன் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“சவோனா போட்டிக்குப் பின்னர், நான் எம்.ஆர்.ஐ. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டேன். இதன்போது வெளியான மருத்துவ அறிக்கையில், காலில் சிறிய உபாதை ஏற்பட்டுள்ளதால் அடுத்த சில வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது உடல் சிகிச்சை நிபுணர், மருத்துவர்கள் மற்றும் குழு உறுப்பினர்களுடன் உடற்தகுதி பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். மேலும், இனிவரும் போட்டிகளில் முன்பை விட வலுவாக பங்கேற்பேன் என நம்புகிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
சவோனா 100 மீற்றர் போட்டியில் இரண்டாவது இடம்பிடித்தருந்த யுப்புன் அபோகோன், போட்டியின் ஆரம்பத்தில் முன்னிலை பெற முடிந்தாலும் கடைசி 20 மீற்றர் தூரத்தின்போது வேகம் குறைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
இதன் காரணமாக, உலகின் பலம் வாய்ந்த வீரர்கள் பங்கேற்கும் டயமன்ட் லீக் ஓட்டப்போட்டியிலிருந்து விலகுவதற்கு யுப்புன் அபேகோனால் தீர்மானித்துள்ளார்.
இந்நிலையில், இந்த ஆண்டு ஆசிய விளையாட்டு விழா மற்றும் உலக தடகள சம்பியன்ஷிப் ஆகியன நடைபெறவுள்ளதால் யுபுனின் உடல் தகுதி மிகவும் முக்கியமானது.
100 மீற்றர் போட்டியில் தெற்காசிய சாதனையைப் படைத்துள்ள யுப்புன் அபேகோன், 10 விநாடிகளுக்குள் போட்டியை நிறைவு செய்த ஒரேயொரு தெற்காசிய தடகள வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM