இலங்கை, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் கோடை காலங்களில் ஏற்படும் வெப்ப அளவானது ஆண்டுதோறும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது என்றும், இதனால் ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப பக்கவாத பாதிப்பிற்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் வெப்ப பக்கவாதம் குறித்து மக்கள் முழுமையான விழிப்புணர்வை பெற வேண்டும் என மருத்துவர் நிபுணர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
104 டிகிரி ஃபாரன்ஹீட் அல்லது 40 டிகிரி செல்சியஸ் இந்த வெப்பத்திற்கும் அதிகமான வெப்பம் புற சூழலில் ஏற்பட்டால், இதன் காரணமாக எம்முடைய உடல்நிலை வெப்ப அளவை தாங்காது... வெப்ப பக்கவாத பாதிப்பிற்குள்ளாகும்.
இதற்கு உடனடியாகவும், தீவிரமாகவும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இதனை தாமதித்தாலோ அல்லது தயங்கினாலோ வெப்ப பக்கவாதம், உங்களது மூளை, இதயம், சிறுநீரகம் மற்றும் தசைகளை தாக்கி சேதப்படுத்தும். சிலருக்கு இதன் காரணமாக மரணம் கூட ஏற்படலாம்.
அதீத உடல் வெப்பநிலையால் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு, தெளிவற்ற பேச்சு, எரிச்சல், மயக்கம் போன்றவை ஏற்படலாம். சிலருக்கு வலிப்பும் ஏற்படக்கூடும். வேறு சிலருக்கு கோமா நிலை கூட உண்டாகலாம்.
இதன் போது உங்கள் உடலிலிருந்து வெளியேறும் வியர்வையில் மாற்றம் ஏற்பட்டு, தோல் தொடுவதற்கு சூடாக இருக்கும். தோல் சிவந்து விடும். சிலருக்கு இயல்பான முறையில் சுவாசம் ஏற்படாமல், தடுமாற்றத்துடன் கூடிய அல்லது ஆழமற்ற சுவாசம் ஏற்படக்கூடும். இதனுடன் உங்களது நாடித்துடிப்பு திடீரென்று இயல்பை விட கூடுதலாக துடிக்கும். தலைவலி ஏற்பட்டு உங்களுக்கு கவனிச்சிதறலை ஏற்படுத்தி, அதீத சோர்வை உண்டாக்கும்.
இதன் போது தசை பகுதியிலிருந்து பிரத்யேக திரவம் வெளியாகி குருதியுடன் கலந்து சிறுநீரகத்திற்கு சென்று, அதன் இயக்கத்திற்கு பாரிய தடையாக விளங்கும். இதனால் வெப்ப பக்கவாதிப்பிற்கு ஆளானவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
அங்கு அவர்களுக்கு உடல் வெப்பநிலை சோதனை, குருதி பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, தசைகளின் இயக்கத் திறன் பரிசோதனை.. போன்றவற்றை மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து அதற்குரிய நிவாரண சிகிச்சையை வழங்குவர்.
குளிர்ந்த நீரை பயன்படுத்தி உடலை சுத்திகரிப்பது... உடல் வெப்பநிலையை தடுக்கும் வகையிலான குளிர் நிலை உத்திகளை பயன்படுத்துவது, ஐஸ் மற்றும் குளிர்ந்த ஆடைகளை பயன்படுத்த பரிந்துரைப்பது, இதனுடன் உடல் வெப்பநிலையை கட்டுக்குள் கொண்டு வரும் பிரத்யேக மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வது போன்ற நிவாரண சிகிச்சைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டால், வெப்ப பக்கவாத பாதிப்பு பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
டொக்டர் சீனிவாசன்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM