(நெவில் அன்தனி)
அவுஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஜூன் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இலங்கையின் குமார் தர்மசேன 4ஆவது மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த இறுதிப் போட்டிக்கான மத்தியஸ்தர் குழாத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவை திங்களன்று (29) அறிவித்தது.
53 வயதான குமார் தர்மசேன இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் 79 தடவைகள் கள மத்தியஸ்தராகவும் 21 தடவைகள் தொலைக்காட்சி மத்திஸ்தராகவும் கடமையாற்றியுள்ளார்.
இறுதிப் போட்டிக்கான கள மத்தியஸ்தர்களாக நியூஸிலாந்தின் கிறிஸ் கஃபானி, இங்கிலாந்தின் ரிச்சர்ட் இலிங்வேர்த் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
48 வயதான கஃபானி 49ஆவது டெஸ்ட் போட்டியிலும் 59 வயதான இலிங்வேர்த் 64ஆவது டெஸ்ட் போட்டியிலும் கள மத்தியஸ்தர்களாக செயற்படவுள்ளனர்.
சவுத்ஹம்ப்டனில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின்போதும் இலிங்வேர்த் மத்தியஸ்தம் வகித்திருந்தார்.
இதேவேளை, இங்கிலாந்தின் மற்றொரு மத்தியஸ்தரான ரிச்சர்ட் கெட்ல்வேர்த், இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தொலைக்காட்சி மத்தியஸ்தராக கடமையாற்றவுள்ளார்.
போட்டி பொது மத்தியஸ்தராக (Match Commissioner) மேற்கிந்தியத் தீவுகளின் ரிச்சி ரிச்சர்ட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM