எம்மில் பலரும் ஒவ்வொரு ராசி, நட்சத்திரத்தில் பிறந்திருப்பர். இதனை அறிந்தும் வைத்திருப்பர். பரிகாரங்களுக்காக ஆலய வழிபாடுகளில் பங்கு பற்றும் போது ராசி, நட்சத்திரத்தை விவரிப்பர்.
மேலும் சிலர் தாங்கள் பிறந்த கோத்திரம் மற்றும் லக்னத்தையும் அறிந்து, அதனையும் பரிகார வழிபாட்டில் குறிப்பிடுவர். ஆனால் மிகச் சிலரே தாங்கள் எந்த கரணத்தில் பிறந்தவர்கள் என்பதனை அறிந்து வைத்திருப்பர்.
ஒருவரது வாழ்வாதாரம் தசாநாதன், புத்திநாதன், நட்சத்திர அதிபதி ஆகியோரின் அமைப்பிற்கு ஏற்ப அமைந்தாலும்... அவர்கள் வெற்றி பெறுவது எந்த கரணத்தில் அவர்கள் பிறந்திருக்கிறார்கள் என்பதனை பொறுத்துதான் தீர்மானிக்கப்படுகிறது.
எம்மில் பலருக்கும் 'கரணம் தப்பினால் மரணம்' என்ற ஒரு சொலவாடையை அறிந்திருப்போம். இதன் பொருள் என்னவெனில், கரணம் என்பது தப்பிவிட்டால் மரணம் நிகழும். இங்கு கரணம் என்பது காற்று தத்துவத்தை குறிக்கிறது. அதாவது எம்முடைய மூச்சைக் குறிக்கிறது. மூச்சு நின்று விட்டால்... மரணம். இதனை உணர்த்தும் வகையில் தான் கரணம் தப்பினால் மரணம் என்ற உன்னதமான மொழியை எம்முடைய முன்னோர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள். மேலும் எம்மை வாழ வைத்துக் கொண்டிருப்பது காற்று தான் என்பதனை அனைவரும் அறிந்திருப்பர். பஞ்சபூதங்களில் உள்ள ஐந்து விடயங்களும் அவசியம் என்றாலும், காற்று தான் இன்றியமையாத விடயம். இதனைத் தான் எம்முடைய ஆன்மீக வழிகாட்டிகள், 'காயமே பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா..' என உரைத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இந்த மனித உடலை குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் பஞ்சாங்கங்களில் நாள், நட்சத்திரம், திதி, யோகம் ஆகிய நான்கை விட கரணம் என்னும் ஐந்தாவது அங்கம் தான் முக்கியமானது. இந்த கரணம் சுப கரணம் என்றும், அசுப கரணம் என்றும் பிரித்து வைத்திருக்கிறார்கள். ஏழு சுபகரணங்களுக்கும், நான்கு அசுப கரணங்களுக்கும் சனி பகவான் தான் அதிபதி. ஏனென்றால் சனி பகவான் தான் ஆயுள்காரகன் என்பதுடன் காற்றின் தத்துவத்தையும் கொண்டிருப்பவர்.
கரணங்கள் அதிகம் இருந்தாலும் முதலில் கரசை கரணம் பற்றி காண்போம். கரசை காரணத்தில் பிறந்தவர்களுக்கு யானை தான் அதன் குறியீடு. கரசை காரணத்தில் பிறந்தவர்கள் தங்களது வணிக ஸ்தலங்களிலும்.. கைபேசிகளிலும்.. யானையின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு வணங்கி வந்தால், வெற்றி உறுதி. மேலும் கரசை காரணத்தின் அதிபதி சந்திரன். சந்திரன் என்றாலே தாயாருக்கு அதீத முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இவர்கள் கரசை கரணம் வரும் தருணத்தில் யானையை வழிபடுவது..யானையிடம் ஆசி பெறுவது அல்லது யானையை வாகனமாக கொண்டிருக்கும் விநாயகப் பெருமானை தரிசிப்பது... போன்ற விடயங்களில் ஈடுபட்டால், உங்கள் வளர்ச்சியில் இருக்கும் மாயத்தடைகள் அனைத்தும் அகன்று வெற்றியும், மகிழ்ச்சியும் சாத்தியப்படும்.
கரசை கரணத்தில் பிறந்தவர்கள் ஒரு முறையேனும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை கரசை கரணம் நடைபெறும் காலகட்டத்தில் அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்தால், உங்களது காரியம் ஈடேறும்.
திருமணமாகி குழந்தை இல்லாத தம்பதிகள், ஜோதிட நிபுணரை அணுகி சுவாதி நட்சத்திரமும், கரசை காரணமும் இணைந்திருக்கும் தருணங்களை சாந்தி முகூர்த்தத்திற்காக குறித்து தருமாறு கேட்டுக் கொண்டால்.. ஜோதிடர்கள் அந்த திகதியையும், தருணத்தையும் குறிப்பிட்டு தருவார்கள். இந்த தருணத்தில் தாம்பத்தியத்தில் ஒருமுறை ஈடுபட்டாலும் கூட, அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். சிலருக்கு கரசை காரணத்தில் தாம்பத்ய உறவில் ஈடுபட்டால் இல்லற உறவு மேம்படுவதுடன், மகப்பேறும் சாத்தியமாகும்.
கரசை கரணத்தில் பிறந்தவர்கள் தங்களுக்கு நினைத்த காரியம் வெற்றியுடன் நிறைவேற. யானையின் வாலில் இடம்பெற்றிருக்கும் முடியினை சிறிதளவு பாகனிடம் கேட்டு, அதற்கு உரிய மரியாதையை செய்து, சங்கல்பம் சடங்கும் செய்து, அதனை மோதிரமாக அணிந்து கொள்ள வேண்டும். பல வெற்றி பெற்ற சாதனையாளர்களின் குறிப்புகளிலிருந்து இதனை எம்முடைய ஆன்மீக பெரியோர்கள் எடுத்துரைத்திருக்கிறார்கள். இதனை பயன்படுத்தியும் கரசைக் கரணத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
நீங்கள் கரசைக் காரணத்தில் பிறந்து மாற்று மதத்தினரை அல்லது மாற்று இனத்தவரை திருமணம் செய்து கொண்டு, இல்லற வாழ்க்கை நிறைவாக இல்லாதிருந்தால்... கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் எனும் ஸ்தலத்திற்கு சென்று, அங்கே யானைகளை வளர்க்கும் இடத்தை கேட்டு தெரிந்து கொண்டு, அங்கு சென்று யானைகளால் தம்பதிகள் இருவரும் தண்ணீரை பீச்சி அடிக்கும் ஆசீர்வாதத்தை வாங்கிக் கொண்டால்.., உங்களுக்குள் இருந்த மாய விரிசல் அகன்று, மனம் ஒத்த தம்பதிகளாக மாறி, மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை நடத்துவர்.
தொகுப்பு: சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM