கொழும்பு - காலி முகத்திடலில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்  வருகைத்தந்தமையால் குறித்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் அரசியல் வேண்டாம் என தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியதால் குறித்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

எவ்வாறாயினும் அரசியலுக்காக தான் வரவில்லையென்றும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துதான் இங்கு வருகைத்தந்ததாக வடிவேல் சுரேஷ் தெரிவித்தமையால் ஆர்ப்பாட்டம் வழமைக்கு திரும்பியது.