கதிர்காம பாதையாத்திரையில் ஈடுபட்டவர் மட்டு மாமாங்கம் ஆலயத்தில் சடலமாக மீட்பு

Published By: Digital Desk 3

30 May, 2023 | 08:59 AM
image

கதிர்காமத்திற்கு சந்நதியில் இருந்து பாதயாத்தரை மேற்கொண்டு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்த யாத்தீரிகர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (29) ஆலயத்தில் உயிரிழந்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் கைதடி மத்திய வீதியைச் சேர்ந்த 74 வயதுடைய இராசையா சிவலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 6 ஆம் திகதி கதிர்காமத்துக்கான பாதயாத்திரையை யாழ் சந்நதி முருகன் ஆலயத்தில் ஆரம்பித்த பாதையாத்திரை குழுவில் பங்கேற்று ஞாயிற்றுக்கிழமை (28) இரவு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்து ஆலய வளாகத்தில் தங்கியிருந்துள்ளனர்.

இந்நிலையில், திங்கட்கிழமை காலையில் குறித்த நபர் பணிஸ் உண்ட பின்னார் அமர்ந்திருந்த நிலையில் திடீரென நிலத்தில் சரிந்து வீழ்ந்ததையடுத்து அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தவைமையக பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21