கைதுசெய்யப்பட்டுள்ள பௌத்தமதகுருவை திரைமறைவு சக்திகள் இயக்குகின்றன – பௌத்தமதகுரு குற்றச்சாட்டு

Published By: Rajeeban

30 May, 2023 | 06:35 AM
image

திரைமறைவு சக்திகளின் செயற்பாடுகள் பௌத்தமதகுருவொருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

ரஜங்கனய சத்ஹரத்ன தேரரின் சமூக ஊடக செயற்பாடுகள் குறி;த்து சிஐடியினரிடம் முறைப்பாடு செய்த பகியங்கல அனந்த சாகர தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

ரஜங்கனய சத்ஹரத்ன தேரரை திரைமறைவு சக்திகள் இயக்குகின்றன என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இனங்களிற்கு இடையில் ஐக்கியமின்மையை ஏற்படுத்தும் வகையில் ரஜங்கனய சத்ஹரத்ன தேரர் சமூக ஊடகங்களில் செயற்பட்டுவந்தார் என அனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.

சமீபகாலத்தில் பல தனிநபர்கள் மதநிந்தனையில் ஈடுபட்டு;ள்ளனர் இவர்களில் பல பௌத்தமதகுருமாரும் உள்ளனர் இவர்கள் பௌத்தசாசனத்தையும் அவமதிக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில் ஒருவர் ரஜங்கனய சத்ஹரரத்னதேரர் அவர் வெறுப்புணர்வை சமூக ஊடகங்களின் மூலம் ஆபாசமான மொழி பிரயோகத்துடன் பரப்புகின்றார் எனவும் அனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.

சிரேஸ்ட மதகுருமாருக்கு எதிராகவும் மகாநாயக்க தேரர்கள் பெண்கள் சிறுவர்களிற்கு எதிராகவும்  இவர் வெறுப்புணர்வு கருத்துக்களை தெரிவித்து வருகின்றார் கொலைகள் சமூகத்தில் வன்முறைகளை தூண்டுதல் குறித்தும் அவர் கருத்து தெரிவித்துவருகின்றார் எனவும் அனந்த சாகார தேரர் தெரிவித்துள்ளார்.

மதஐக்கியமின்மையை ஏற்படுத்துவதற்காக ஷரியா சட்டத்தை ஆதரித்துள்ள அவர் இதன் மூலம் மத ஐக்கியமின்மையை ஏற்படுத்த முயல்கின்றார் சிறுபான்மை மற்றும் மதகுழுக்கள் மத்தியில் பதற்றத்தை அதிகரிப்பதற்காக அவர் கருத்துக்களை வெளியிட்ட தருணங்களும் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது சமூக ஊடக நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையா என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர் நாங்கள் அவரின் பிரிவின் தலைமைக்கு இது குறித்து எச்சரித்ததுடன் சமூக ஊடகங்களில் அவரின் நடவடிக்கைகளை கண்டித்தபோதிலும் அவர் தனது நடவடிக்கைகளை திருத்திக்கொள்ள முயலவில்லை என தெரிவித்துள்ள அனந்த சாகர தேரர் இதன் காரணமாக அவரின் பின்னால் திரைமறைவு சக்திகள் இருந்து அவரை ஆட்டுவிக்கின்றன என நாங்கள் கருதுகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

அவரது வங்கிக்கணக்குகளிற்கு பல பணப்பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்படுகின்றது எனினும் இதுவரை இது தொடர்பான எவரும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54
news-image

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு வலியுறுத்தி...

2023-09-29 18:10:31
news-image

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து...

2023-09-29 17:27:37
news-image

ஜனாதிபதி ரணில் - ஐரோப்பிய கவுன்சில்...

2023-09-29 17:36:25