முஸ்லிம்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் - தேசிய ஐக்கிய முன்னணி

Published By: Vishnu

29 May, 2023 | 09:57 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

முஸ்லிம் சமூகம் சமகாலத்தில் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதற்கான பூரண ஒத்துழை வழங்குவதற்கு முஸ்லிம் சமூகம் தயாராக இருக்கிறது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.

தேசிய ஐக்கிய முன்னணி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ள பகிரங்க கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

நீங்கள் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றபோது நாங்கள் எதிர்கொண்ட பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு தீர்வுகாண உங்கள் துணிச்சலான சரியான தலைமைத்துவத்தை நாங்கள் பாராட்டுகிறோம், எங்களின் பிரார்த்தனைகளும் ஆசீர்வாதங்களும் உங்கள் முன்னால் இருக்கும் அனைத்து சவால்களிலும் உங்களுடன் இருக்கும்.

உங்களது தொடர்ச்சியான தலைமைத்துவம் இன்னும் பல வருடங்களுக்கு இலங்கையில் ஸ்திரத்தன்மையையும் சுபீட்சத்தையும் கொண்டு வரும் என்பதில் எமக்கு சந்தேகமில்லை.

பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான அறிகுறிகளை நாம் காணும் நிலையில், முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சில முக்கியப் பிரச்சினைகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

2009 ஆம் ஆண்டு  போர் முடிவடைந்த பின்னர் முஸ்லிம் சமூகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் துன்புறுத்தலுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் முகம் கொடுத்துள்ளது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி முஸ்லிம் பெயர்களைக் கொண்ட பயங்கரவாதிகளால் துரதிஷ்டவசமான ஈஸ்டர் ஞாயிறு வெடிகுண்டுத் தாக்குதலால் இது சீற்றமடைந்தது. இந்த வழிகெட்ட இளைஞர்களின் கேவலமான செயலை  முஸ்லிம் சமூகம் மன்னிக்கவில்லை, நாட்டில் உள்ள எந்த மையவாடியிலும் அவர்களுக்கு இஸ்லாமிய இறுதிச் சடங்கு கூட செய்யவில்லை.

இந்த துரதிஷ்டமான நாளிலிருந்து, முழு முஸ்லிம் சமூகமும் அச்சத்துடன் வாழ்ந்து வந்தது, இது இளைஞர்கள் மற்றும் வயதான முஸ்லிம்கள் மீது பெரும் உளவியல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் தாக்குதல் இஸ்லாமிய பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக அனுமானித்து சிங்கள பௌத்த வாக்குகளைப் பயன்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட அரசியல் உத்தி என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

இன்றுவரை, பல விசாரணை குழுகளுக்குப் பிறகு, இஸ்லாமிய பயங்கரவாதத்தில் எந்த முஸ்லிமும் குற்றவாளியாகக் கண்டறியப்படவில்லை. நிச்சயமாக பயங்கரவாத குண்டுதாரிகள் பெயரளவில் முஸ்லிம்கள், ஆனால் அவர்கள் அந்த வன்முறையை இஸ்லாம் அல்லது முஸ்லிம்களின் பெயரால் ஏற்படுத்தியதாக நாங்கள் நம்பவில்லை.

இந்த படுகொலையின் பின்னணியில் உள்ள உண்மை மக்களுக்கு நன்றாகத் தெரியும் வகையில், பொது மக்கள் தீர்ப்பளிக்க ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் அனைத்து தொகுதிகளையும் வெளியிடுமாறு நாங்கள் உங்களை  கேட்டுக்கொள்கிறோம்

மேலும் ஈஸ்டர் தாக்குதலைத்   தொடர்ந்து, அதிகாரிகள் மற்றும் பொலிஸாரால் பல பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்கள் வலுக்கட்டாயமாக மூடப்பட்டன. இந்த மதக் கல்வி நிறுவனங்களில் எந்த விதமான தீவிரமயமாக்கலுக்கும் எந்த ஆதாரமும் இல்லை.

நான்காண்டுகளாகியும், பொலிஸாரால் இந்த நிறுவனங்கள் எதற்கும் குற்றம் சாட்ட முடியவில்லை, எனவே இவற்றுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்றால் அவற்றை செயல்பட அனுமதிக்க தேவையான அறிவுறுத்தல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முஸ்லிம் கோவிட் மரணங்களை கட்டாயமாக தகனம் செய்வது, கோவிட் தொற்றுநோய்களின் போது இஸ்லாமிய மத நடைமுறையை மீறி முஸ்லிம்கள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வந்தனர்.

தொழில்நுட்பக் குழு அரசாங்கத்தை தவறாக வழிநடத்தி முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்ய வற்புறுத்தியதாக பாராளுமன்றத்திலும் வெளியிலும் சுகாதார அமைச்சர் தற்போது வெளிப்படுத்தியுள்ள நிலையில், சுகாதார அமைச்சின் அங்கத்தவர்கள் யாராக இருந்தாலும் விசாரணை நடத்த குழுவொன்றை நியமித்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வேண்டுமென்றே தவறாக வழிநடத்தி முஸ்லிம் உடல்களை தகனம் செய்ய வற்புறுத்திய தொழில்நுட்பக் குழு. தகனம் செய்யப்பட்ட ஒவ்வொரு முஸ்லிம் கோவிட் இறந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் மற்றும் இந்த இஸ்லாமிய விரோத செயலுக்கு அரசாங்கம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

மேலும் வைத்தியர் ஷாபி, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் இந்த இரண்டு முஸ்லிம்களும் சமூக ஆர்வலர்களாக இருந்தனர், அவர்கள் தங்கள் நேரம், பணம் மற்றும் தொழில்முறை நிபுணத்துவத்தை தங்கள் தொழில்முறை சேவைகள் தேவைப்படும் எவருக்கும் சேவை செய்ய அர்ப்பணித்தனர்.

அரசியலமைப்பு நெருக்கடியின் போது இளம் சட்டத்தரணி ஹிஜாஸ் தனது மூத்தவர்களுடன் வாதாடினார். மஹிந்த ராஜபக்ஷ் உங்கள்  பிரதமர் பதவியை ஏற்றார். இன்றுவரை, ஜனநாயகத்தை பாதுகாப்பதன் காரணமாக ஹிஜாஸ் குறிவைக்கப்படுகிறார். டாக்டர் ஷாபி அப்போதைய அரசாங்கத்தின் இனவெறி நிகழ்ச்சி நிரலுக்கு பலியான மற்றொருவர்.

அத்துடன் முஸ்லிம் அறக்கட்டளைகளுக்குள் அல்லது நன்கொடையாளர்களால் வழங்கப்பட்ட வக்ப் சொத்துக்களுக்குள் பல முரண்பாடுகள் உள்ளன. மஹரகமவில் உள்ள கபூரிய்யா பள்ளிச் சொத்து ஒரு உதாரணம்.

அப்துல் கபூர் குடும்பத்தின் 4வது தலைமுறை உறுப்பினர் பள்ளியின் நிர்வாகத்தை எடுத்து, பள்ளிக்கு ஆதரவாக வழங்கப்பட்ட சுலைமான் நர்சிங் ஹோம் சொத்தை விற்றுள்ளனார். ஒரே நாளில் ஒரு பில்லியன் ரூபாய்க்கு மூன்று இடமாற்றங்கள் நடந்துள்ளன, அதாவது கபூரியாவிலிருந்து சொப்லாெஜிக். ஒடேல் க்கு மாற்றி இருக்கிறது.

இதுவே 4வது தலைமுறை கபூர் குடும்பத்தின் மறைமுக நோக்கங்களை நிரூபிக்கிறது. வக்பு வாரியமும், வக்ப் தீர்ப்பாயமும் இவற்றை வக்ப் சொத்து என அறிவித்துள்ளன.

மேலும் பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் பல முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு இன்னும் சிறைகளில் வாடுகின்றனர். 

இலங்கை முஸ்லிம் கவுன்சில் பாதுகாப்பு அமைச்சுடன் ஒரு உரையாடலைத் தொடங்கியது, விசாரணைகளை விரைவாகக் கண்காணிக்கவும், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கடுமையான குற்றச்சாட்டுகள் இல்லை என்றால் அவர்களை விடுவிக்கவும்.

ஒரு சுருக்கமான சமூக அடிப்படையிலான மறுசீரமைப்பு திட்டத்தின் பின்னர் விடுவிக்கப்படக்கூடிய பலரை பாதுகாப்பு அமைச்சின் விசாரணை பிரிவு அடையாளம் கண்டுள்ளது, ஆனால் 2022 இல் ஏற்பட்ட திடீர் அரசியல் நெருக்கடி காரணமாக, இந்த திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த செயல்முறையை மறுதொடக்கம் செய்ய உங்கள் தலையீட்டை நாங்கள் பெரிதும் எதிர்பார்கிறோம்.

மேலும் அமைச்சுச் செயலாளர்கள், தலைமைச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், அல்லது மாகாண அமைச்சின் செயலாளர்கள் போன்ற அரசாங்க நிர்வாகத்தின் உயர் பதவிகளில் முஸ்லிம் அதிகாரிகளுக்கு பற்றாக்குறை உள்ளது. இந்த ஒவ்வொரு பதவிக்கும் குறைந்தபட்சம் ஒரு முஸ்லிம் அதிகாரியையாவது நியமிப்பது பற்றி பரிசீலிக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறோம்.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கில் சிறுபான்மையினருக்கான அரசியல் தீர்வுகளைக் காண்பதற்கான உங்கள் துணிச்சலான முயற்சியை நாங்கள் வரவேற்கிறோம். வடக்கு மற்றும் கிழக்கு அரசியல்வாதிகளுடன் நீங்கள் நடத்திய பேச்சுவார்த்தை பலனளித்துள்ளது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

நீங்கள் எடுக்கும் தீர்மானங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முஸ்லிம் மற்றும் மலையக அரசியல் வாதிகளுடன் கலந்துரையாடி தீர்வுகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீலாதுன் நபி தினத்தில் பச்சை, வெள்ளை...

2023-09-26 07:06:08
news-image

18 மாதங்களில் 348 விசேட வைத்திய...

2023-09-25 22:11:53
news-image

நாட்டில் பல இடங்களில் மழைக்கான சாத்தியம்...

2023-09-26 06:56:47
news-image

இலங்கையில் நிலநடுக்கம்

2023-09-26 06:20:33
news-image

நாணய நிதியத்தின் உதவி கிடைக்காமல் போகும்...

2023-09-25 21:47:22
news-image

சமூகவலைத்தளங்களை அடக்குவது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில்...

2023-09-25 22:00:28
news-image

பிரகடனங்களை நிறைவேற்றுவதற்கான அரசியல் தன்முனைப்பின்றி இலக்குகளை...

2023-09-25 21:59:41
news-image

சர்வதேச நிதியியல் கட்டமைப்புக்களின் தீர்மானங்கள் அனைத்து...

2023-09-25 22:10:55
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி அகழ்வுப்பணி ;...

2023-09-25 21:55:38
news-image

இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனுக்கு...

2023-09-25 21:47:51
news-image

பிலியந்தலயில் ஹெரோயின் போதைப்பொருளுடன் தாயும் மகனும்...

2023-09-25 22:07:49
news-image

ஹோமாகம பூங்காவில் பாலியல் ரீதியான செயற்பாட்டில்...

2023-09-25 22:05:06