புதுக்குடியிருப்பில் குளத்தினை ஆக்கிரமிக்கும் தனி நபர் ! மக்கள் எதிர்ப்பு போராட்டம்; மனுவும் கையளிப்பு

Published By: Vishnu

29 May, 2023 | 10:01 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவின் உடையார்கட்டு கமநலசேவைத் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குளமாக காணப்படும் வெள்ளப்பள்ளம் குளம் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக குளமாக காணப்பட்டுள்ளது.

இந்த குளம் இருப்பதால் அருகில் உள்ள மக்களுக்கான குடிதண்ணீர், கால்நடைகளுக்கான மேச்சல் மற்றும் தண்ணீர் மீன்பிடி தொழில் மேட்டு நில பயிர்செய்கை என மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இந்த குளத்தின் கீழ் விவசாய செய்கை காணப்படாத நிலையில் அருகில் சில காணிகளில் நெல்விதைப்பினை காலபோகத்தில் மேற்கொண்டு வருகின்றார்கள்.

இவ்வாறு காணப்படும் குளத்தினை தனிநபர் ஒருவர் அபகரித்து எல்லை கற்கள் போட்டு  வேலி அடைத்து  வைத்துள்ளதால் தனிநபரின் அபகரிப்பிற்கு உள்ளாகியுள்ள குளத்தை மீட்க  கிராம மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

திங்கட்கிழமை (29) வெள்ளப்பள்ளம் குளப்பகுதியில் மக்கள் எதிர்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள் இதன்போது 100 வரையான மக்கள் பங்கெடுத்துள்ளார்கள். பதாதைகளை தாங்கியவாறு எதிர்ப்பில் ஈடுபட்டு குளத்தினை தனிநபர் ஆக்கிரமிப்பிற்கு எதிர்பு தெரிவித்துள்ளார்கள் தொடர்ந்து அங்கு நாட்டப்பட்ட தூண்களை மக்கள் அகற்றியுள்ளார்கள்.

இதனை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு சென்ற மக்கள் அங்கு பிரதேச செயலகம் முன்பாக எதிர்ப்பினை வெளிப்படுத்தி மனுவினை பிரதேச செயலாளரிடம் கையளித்துள்ளார்கள்.

இதன்போது குறித்த குளம் தொடர்பில் பிரதேச செயலாளர் மக்களுக்கு தமது நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளார். குளஆக்கிரமிப்பு தொடர்பில் மேலதிகாரிகளிடம் தெரியப்படுத்தி மேலும் ஆராயவுள்ளோம் முதல் ஆரம்ப கட்ட நடவடிக்கையின் படிகுளம் அமைந்துள்ள காணி தனியார் காணியாக காணப்படுகின்றது குளத்தினை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு விவாசாய திணைக்களத்திடம் இருக்கின்றது மேலதிகமாக என்ன செய்யலாம் என்பது தொடர்பில் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

18 மாதங்களில் 348 விசேட வைத்திய...

2023-09-25 22:11:53
news-image

நாட்டில் பல இடங்களில் மழைக்கான சாத்தியம்...

2023-09-26 06:56:47
news-image

இலங்கையில் நிலநடுக்கம்

2023-09-26 06:20:33
news-image

நாணய நிதியத்தின் உதவி கிடைக்காமல் போகும்...

2023-09-25 21:47:22
news-image

சமூகவலைத்தளங்களை அடக்குவது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில்...

2023-09-25 22:00:28
news-image

பிரகடனங்களை நிறைவேற்றுவதற்கான அரசியல் தன்முனைப்பின்றி இலக்குகளை...

2023-09-25 21:59:41
news-image

சர்வதேச நிதியியல் கட்டமைப்புக்களின் தீர்மானங்கள் அனைத்து...

2023-09-25 22:10:55
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி அகழ்வுப்பணி ;...

2023-09-25 21:55:38
news-image

இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனுக்கு...

2023-09-25 21:47:51
news-image

பிலியந்தலயில் ஹெரோயின் போதைப்பொருளுடன் தாயும் மகனும்...

2023-09-25 22:07:49
news-image

ஹோமாகம பூங்காவில் பாலியல் ரீதியான செயற்பாட்டில்...

2023-09-25 22:05:06
news-image

சமுர்த்தி வங்கியில் வைப்பிலிடப்பட்ட தனது பணத்தை...

2023-09-25 17:02:06