இன, மத வெறுப்பை கக்கி வரும் பெளத்த தேரர்களை நோக்கியும் சட்டம் பாய வேண்டும் - மனோ

Published By: Vishnu

29 May, 2023 | 10:33 PM
image

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் சமூக பேச்சாளர் நதாஷா எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக அரசாங்கத்தின்  சட்டம், ஒழுங்கு  விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னேடுக்கப்படுகின்றன. சட்டம், ஒழுங்கு, நீதி துறை தன் கடமையை செய்யட்டும்.  

அதேவேளை இந்நாட்டில் இனவாத வெறுப்பு பேச்சுகளை தொடர்ந்து இந்து, இஸ்லாம், கத்தோலிக்க மதங்களுக்கு  எதிராக பேசி வரும் பெளத்த பிக்குகளுக்கு நோக்கியும் இதே சட்டம், ஒழுங்கு, நீதி துறை பாய வேண்டும்.

எந்தவொரு மத தலைவரும், செயற்பாட்டாளரும், தமது இனவாத, மதவாத நடவடிக்கைள் தொடர்பில் இனிமேல் சட்டத்தின் முன் விலக்கு பெற கூடாது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில்  மனோ கணேசன் எம்பி வெளியிட்டுள்ள டுவீடர் பதிவில் கூறியள்ளதாவது,

பாஸ்டர் ஜெரோம், முற்போக்கு பேச்சாளர் நதாஷா ஆகியோரை சுற்றி வளைத்திருக்கும் பொலிஸ், நீதிமன்ற சட்டங்கள், இந்நாட்டில் இனவாத வெறுப்பு பேச்சுகளை தொடர்ந்து பேசி வரும் பெளத்த பிக்குமார்களுக்கு எதிராகவும் பயன்பட வேண்டும். இனிமேல் இந்நாட்டில், சட்டம் ஒருபக்க சார்பாக இருக்க முடியாது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேமச தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோரின் டுவீடர் தளங்களுக்கும், தமது டுவீடர் செய்தியை மனோ கணேசன் எம்பி இணைத்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-07-15 06:35:23
news-image

வியாபாரியை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பது பிறிதொரு...

2024-07-14 21:25:06
news-image

மட்டக்களப்பில் முச்சக்கர வண்டியை மோதிவிட்டு தப்பிச்...

2024-07-14 21:19:43
news-image

திருகோணமலையில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட பெண்...

2024-07-14 21:24:24
news-image

கிளிநொச்சியில் ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் !

2024-07-14 21:25:27
news-image

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு விளக்கமறியல்...

2024-07-14 21:27:47
news-image

வட்டுக்கோட்டையில் பத்து போத்தல் கசிப்புடன் பெண்...

2024-07-14 17:46:06
news-image

முச்சக்கரவண்டிக்கு எரிபொருள் நிரப்பச் சென்ற முதியவர்...

2024-07-14 17:17:42
news-image

மக்கள் பெருமையுடன் முன்னோக்கிச் செல்லக்கூடிய சூழலை...

2024-07-14 17:24:08
news-image

தீகவாபி தூபியில் நினைவுச் சின்னங்கள், பொக்கிஷங்கள்...

2024-07-14 17:28:57
news-image

எதிர்க்கட்சி தலைவருக்கான பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்...

2024-07-14 17:53:32
news-image

1700 ரூபாய் சம்பளம் வழங்குமாறு கோரி...

2024-07-14 16:29:28