ஒரு கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் கொள்ளை ; வர்த்தகரின் உதவியாளர் உள்ளிட்ட மூவர் கைது

Published By: Digital Desk 3

29 May, 2023 | 04:40 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த வர்த்தகர் ஒருவரின் ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய  மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வெளிநாட்டிலிருந்து நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சுங்கத்தினால் விடுவிக்கப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வாகனம் மூலம் கொழும்பு, கிராண்ட்பாஸுக்கு எடுத்து வரும் வழியில் அவரை பின்தொடர்ந்து வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வேன் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத சிலரால் துப்பாக்கி முனையில் வர்த்தகரை அச்சுறுத்தி  பொருட்கள் அனைத்தும் கொள்ளையிட்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய  வர்த்தகரின் உதவியாளராகப் பணியாற்றிய  பெண்ணொருவர்  இந்தக் கொள்ளைச் சம்பவத்தைத் திட்டமிட்டு வழிநடத்தியதாக கட்டுநாயக்க பொலிஸார் பின்னர் கண்டுபிடித்துள்ளனர். 

இதனடிப்படையில் கொள்ளைக்கு திட்டமிட்ட பெண் உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயல்களுடன் தொடர்புடைய மேலும் இருவரை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடா இந்திய விவகாரம் -இலங்கை இந்தியாவிற்கு...

2023-09-26 08:34:02
news-image

மீலாதுன் நபி தினத்தில் பச்சை, வெள்ளை...

2023-09-26 07:06:08
news-image

18 மாதங்களில் 348 விசேட வைத்திய...

2023-09-25 22:11:53
news-image

நாட்டில் பல இடங்களில் மழைக்கான சாத்தியம்...

2023-09-26 06:56:47
news-image

இலங்கையில் நிலநடுக்கம்

2023-09-26 06:20:33
news-image

நாணய நிதியத்தின் உதவி கிடைக்காமல் போகும்...

2023-09-25 21:47:22
news-image

சமூகவலைத்தளங்களை அடக்குவது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில்...

2023-09-25 22:00:28
news-image

பிரகடனங்களை நிறைவேற்றுவதற்கான அரசியல் தன்முனைப்பின்றி இலக்குகளை...

2023-09-25 21:59:41
news-image

சர்வதேச நிதியியல் கட்டமைப்புக்களின் தீர்மானங்கள் அனைத்து...

2023-09-25 22:10:55
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி அகழ்வுப்பணி ;...

2023-09-25 21:55:38
news-image

இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனுக்கு...

2023-09-25 21:47:51
news-image

பிலியந்தலயில் ஹெரோயின் போதைப்பொருளுடன் தாயும் மகனும்...

2023-09-25 22:07:49