ரோமானியத் தலைநகர் புக்காரெஸ்ட்டில் உள்ள பிரபல இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 38 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகினர்.

புக்காரெஸ்ட்டின் வட பகுதியில் உள்ள ‘பம்பூ’ என்ற இரவு விடுதியிலேயே இவ்விபத்து ஏற்பட்டது. இதுவரை விபத்துக்கான காரணம் எதுவும் தெரியவரவில்லை.

விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் சுமார் இருபது அம்பியூலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்ததாகவும், புகையால் ஏற்பட்ட மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட 38 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

புகைபிடிக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், குறித்த விபத்துக்கு விடுதியில் இருந்தவர்கள் புகைபிடித்ததே காரணமாக இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.