உலகில் அமைதியை கட்டியெழுப்புவதற்காக உலக மக்களே ஒன்றுதிரளும் தசாப்த கால முயற்சியினை நினைவுகூரும் வகையில் இந்த மே மாதம் முழுவதும் 59 நாடுகளில் அமைதி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
அதன் அடிப்படையில், தென் கொரியாவில் உள்ள சியோல் ஒலிம்பிக் பூங்காவின் (Seoul Olympic Park) அமைதி வாயிலில் கடந்த 25ஆம் திகதி வியாழக்கிழமை அமைதிக்கான ஒன்றுகூடல் நிகழ்வொன்று இடம்பெற்றது.
சுமார் 5000 பேரின் பங்கேற்பில் ஆரம்பமான இந்நிகழ்வில் சொர்க்க கலாசாரம், உலக அமைதி மற்றும் ஒளியை நிலைநிறுத்தல் என்கிற கோட்பாடுகளை கொண்டியங்கும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனமான HWPL அமைப்பின் தலைவர் மான் ஹி லி பங்கேற்றார்.
'HWPLஇன் உலக அமைதிப் பிரகடனம் மற்றும் அமைதி நடைப்பயணத்தின் 10வது ஆண்டு நினைவு' எனும் கருப்பொருளில் அமைந்த இந்நிகழ்வில் HWPL தலைவர் மான் ஹி லி உரையாற்றுகையில்,
"உலக அமைதிக்காக நாங்கள் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று 10 ஆண்டுகளுக்கு முன் உறுதியளித்த நாள் முதல் தற்போது வரை உலகம் முழுவதுமான அமைதிக்கு அழைப்பு விடுத்து வருகிறோம்.
நாம் வீட்டிலும் பள்ளியிலும் அமைதியைக் கற்பிக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் அமைதியின் தூதுவர்களாக மாற வேண்டும்.
'அமைதி' என்ற ஒற்றைச் சொல்லின் கீழ் அனைவரும் ஒன்றுபட்டு, நல்லதொரு உலகத்தை உருவாக்கி, அதை ஒரு சிறந்த பாரம்பரியமாக மாற்றி, வருங்கால சந்ததியினருக்கு அளிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். நாம் வாழும் இந்த காலகட்டத்தில் நாம் செய்யவேண்டிய நற்செயல் இதுவே என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் HWPL அமைப்பினால் உலக அமைதிப் பிரகடனத்தின் 10ஆவது ஆண்டு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
ஜனநாயகம், நீதி, சிவில் உரிமைகள் மற்றும் சமத்துவம், மத சுதந்திரம் மற்றும் பொறுப்புடைமை என்ற கொள்கைகளின் அடிப்படையில், அதிகார ஆட்சியிலிருந்து சட்ட ஆட்சிக்கான மாற்றத்தை தொடர 'அமைதி மற்றும் போர் நிறுத்தப் பிரகடனம் - DPCW' உருவாக்கப்பட்டதாக கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM