யாழ்.நகரில் விடுதியில் தங்கி இருந்த இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது

Published By: Digital Desk 3

29 May, 2023 | 04:28 PM
image

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு இன்று திங்கட்கிழமை  கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விடுதியில் சோதனை நடாத்தி மூவர் கைது செய்துள்ளனர். 

குறித்த விடுதியில் சந்தேகத்திற்கு இடமானவர்களின் நடமாட்டங்கள் காணப்படுவதாகவும் , அதன் ஊடாக அங்கு கலாச்சார சீரழிவுகள்  இடம்பெறுவதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன . 

அதன் அடிப்படையில் குறித்த விடுதியினை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் முற்றுகையிட்டு சோதனையிட்ட போது, உரிய பதிவுகள் இன்றி விடுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தனி அறைகளில் தங்கி இருந்த தெகிவளை பகுதியைச் சேர்ந்த இரு பெண்களை கைது செய்துள்ளனர். அத்துடன் விடுதியின் முகாமையாளரையும் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட இரு பெண்களையும் முகாமையாளரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

அதேவேளை அப்பகுதி மக்களால் பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு விடுதி தொடர்பில் ஏற்கனவே பல முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் , அவர்கள் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காத நிலையில் நேரடியாக குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு முறைப்பாடு செய்யப்பட்டதனை அடுத்தே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீலாதுன் நபி தினத்தில் பச்சை, வெள்ளை...

2023-09-26 07:06:08
news-image

18 மாதங்களில் 348 விசேட வைத்திய...

2023-09-25 22:11:53
news-image

நாட்டில் பல இடங்களில் மழைக்கான சாத்தியம்...

2023-09-26 06:56:47
news-image

இலங்கையில் நிலநடுக்கம்

2023-09-26 06:20:33
news-image

நாணய நிதியத்தின் உதவி கிடைக்காமல் போகும்...

2023-09-25 21:47:22
news-image

சமூகவலைத்தளங்களை அடக்குவது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில்...

2023-09-25 22:00:28
news-image

பிரகடனங்களை நிறைவேற்றுவதற்கான அரசியல் தன்முனைப்பின்றி இலக்குகளை...

2023-09-25 21:59:41
news-image

சர்வதேச நிதியியல் கட்டமைப்புக்களின் தீர்மானங்கள் அனைத்து...

2023-09-25 22:10:55
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி அகழ்வுப்பணி ;...

2023-09-25 21:55:38
news-image

இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனுக்கு...

2023-09-25 21:47:51
news-image

பிலியந்தலயில் ஹெரோயின் போதைப்பொருளுடன் தாயும் மகனும்...

2023-09-25 22:07:49
news-image

ஹோமாகம பூங்காவில் பாலியல் ரீதியான செயற்பாட்டில்...

2023-09-25 22:05:06