கைதான இராஜாங்கனை சத்தாரத்ன தேரருக்கு விளக்கமறியல்

Published By: Digital Desk 3

29 May, 2023 | 04:12 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட இராஜாங்கனை சத்தாரத்ன தேரர் மற்றும் நகைச்சுவை மேடைப் பேச்சாளர் நடாஷா ஆகிய இருவரும் எதிர்வரும் 7 ஆம் திகதி  வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு, கோட்டை நீதவான்  திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்கனை சத்தாரதன தேரர் திங்கட்கிழமை (29)  அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர பிரதேசத்தில்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் முன்வைத்த  முறைப்பாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இராஜாங்கனை சத்தாரதன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்  நேற்றைய தினம் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபட்ட நிலையில் எதிர்வரும் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நடாஷா எதிரிசூரியவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இதனடிப்படையில் அவரை கைது செய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு பல தரப்பினரும் குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களத்துக்கு  முறைப்பாடுகளை சமர்ப்பித்தனர். இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணனிப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபர் நடாஷா எதிரிசூரியவை சிங்கப்பூர் செல்ல முயன்ற போது கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரை ஞாயிற்றுக்கிழமை  கொழும்பு, கோட்டை நீதவான்  திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பௌத்தம் மற்றும் கலாசாரத்தை அவமதிக்கும் வகையிலும், மக்கள் மத்தியில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும் வகையிலும் சந்தேகநபர் கருத்துகளை தெரிவித்ததாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்தது.

இதன்படி முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை  பரிசீலித்த கோட்டை நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீலாதுன் நபி தினத்தில் பச்சை, வெள்ளை...

2023-09-26 07:06:08
news-image

18 மாதங்களில் 348 விசேட வைத்திய...

2023-09-25 22:11:53
news-image

நாட்டில் பல இடங்களில் மழைக்கான சாத்தியம்...

2023-09-26 06:56:47
news-image

இலங்கையில் நிலநடுக்கம்

2023-09-26 06:20:33
news-image

நாணய நிதியத்தின் உதவி கிடைக்காமல் போகும்...

2023-09-25 21:47:22
news-image

சமூகவலைத்தளங்களை அடக்குவது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில்...

2023-09-25 22:00:28
news-image

பிரகடனங்களை நிறைவேற்றுவதற்கான அரசியல் தன்முனைப்பின்றி இலக்குகளை...

2023-09-25 21:59:41
news-image

சர்வதேச நிதியியல் கட்டமைப்புக்களின் தீர்மானங்கள் அனைத்து...

2023-09-25 22:10:55
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி அகழ்வுப்பணி ;...

2023-09-25 21:55:38
news-image

இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனுக்கு...

2023-09-25 21:47:51
news-image

பிலியந்தலயில் ஹெரோயின் போதைப்பொருளுடன் தாயும் மகனும்...

2023-09-25 22:07:49
news-image

ஹோமாகம பூங்காவில் பாலியல் ரீதியான செயற்பாட்டில்...

2023-09-25 22:05:06