எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய கடற்பரப்பில் இரசாயன பதார்த்தங்கள் கசியவில்லை - கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை

Published By: Vishnu

29 May, 2023 | 10:10 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகி மூழ்கிய எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் சிதைவுகளில் இருந்து இரசாயன பதார்த்தம் கசிவதாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும். 

கப்பல் மூழ்கிய கடற்பரப்பை கடற்படை நாளாந்தம் கண்காணித்து வருகிறது என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் ஜகத் குணசேகர தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் விபத்துக்கு உள்ளாகி கடலில் மூழ்கிய எம்.சி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் சிதைவுகளில் இருந்து இரசாயன பதார்த்தம் கசிவதாக ஞாயிற்றுக்கிழமை (28) செய்தி வெளியாகின.

இதனை தொடர்ந்து நேற்றைய தினம் கடற்படை மற்றும் கடல் வளங்கள் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றின் அதிகாரிகள் கப்பல் மூழ்கிய இடத்துக்கு நேரடியாக சென்று கண்காணித்த போது அப்பகுதியில் இரசாயன பதார்த்தம் கசிவு,எண்ணெய் படலம் தேங்கியிருத்தல் ஆகியன ஏதும் காணப்படவில்லை.கப்பல் மூழ்கிய வலயத்தை கடல் வளங்கள் பாதுகாப்பு அதிகார சபை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

கடற்படையுடன் ஒன்றிணைந்து கப்பல் மூழ்கிய பகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதி ஆகியவற்றை  சுழியோடிகள் குழுவின் ஒத்துழைப்புடன் 2023.03.15 ஆம் திகதி முதல் 2023.03.24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அப்பகுதியில் நவீன கண்காணிப்பு கெமராக்களை கொண்டு ஆய்வு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

கப்பல் மூழ்கிய பகுதியை கடற்படையினர் நாளாந்தம் கண்காணித்து வருகின்றன.அதன் அறிக்கை தொடர்ந்து பெற்றுக்கொள்ளப்படுகிறது,அத்துடன் விபத்துக்கு உள்ளான இந்த கப்பலை கடலில் இருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிறுவனத்திடமிருந்து உரிய அறிக்கைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன,ஆகவே கப்பல் மூழ்கிய கடற்பரப்பில் இரசாயன பதார்த்தம்,எண்ணெய் படலம் காணப்படுவதாக வெளியான செய்தி அடிப்படையற்றதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீலாதுன் நபி தினத்தில் பச்சை, வெள்ளை...

2023-09-26 07:06:08
news-image

18 மாதங்களில் 348 விசேட வைத்திய...

2023-09-25 22:11:53
news-image

நாட்டில் பல இடங்களில் மழைக்கான சாத்தியம்...

2023-09-26 06:56:47
news-image

இலங்கையில் நிலநடுக்கம்

2023-09-26 06:20:33
news-image

நாணய நிதியத்தின் உதவி கிடைக்காமல் போகும்...

2023-09-25 21:47:22
news-image

சமூகவலைத்தளங்களை அடக்குவது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில்...

2023-09-25 22:00:28
news-image

பிரகடனங்களை நிறைவேற்றுவதற்கான அரசியல் தன்முனைப்பின்றி இலக்குகளை...

2023-09-25 21:59:41
news-image

சர்வதேச நிதியியல் கட்டமைப்புக்களின் தீர்மானங்கள் அனைத்து...

2023-09-25 22:10:55
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி அகழ்வுப்பணி ;...

2023-09-25 21:55:38
news-image

இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனுக்கு...

2023-09-25 21:47:51
news-image

பிலியந்தலயில் ஹெரோயின் போதைப்பொருளுடன் தாயும் மகனும்...

2023-09-25 22:07:49
news-image

ஹோமாகம பூங்காவில் பாலியல் ரீதியான செயற்பாட்டில்...

2023-09-25 22:05:06