பேராசிரியர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை கல்வியால் உச்சத்திற்குக் கொண்டுவர முடியும் - கலாநிதி ஆறு. திருமுருகன்

Published By: Digital Desk 3

29 May, 2023 | 05:42 PM
image

(எம்.நியூட்டன்)

பேராசிரியர்கள் ஒன்றிணைந்து செயற்படுவார்கள் என்றால் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தை கல்வியால் உச்சத்திற்குக் கொண்டுவர முடியும் என செஞ்சோற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தெரிவித்தார்.

செஞ்சோற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் அறநிதிய சபை நடாத்தம்  இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான அன்னபூரணி மண்படத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தலைமையுரை ஆற்றும்  போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பேராசிரியர்கள் சமுகப்பொறுப்பாளர்கள் சான்றோர்கள் ஒன்றுகூடி நிலைபேறான அபிவிருத்தி தொடர்பில் சிந்திக்கவேண்டும் பேராசிரியர்கள் நல்லதை நினைப்பார்கள் என்றால் வடக்கு கிழக்கு மலையகத்தை கல்வியால் உச்சத்துக்குக் கொண்டு வரமுடியும்.

பல்கலைக்கழகத்திற்குள் மாத்திரம் பேராசிரியர்கள் இருக்காது சமூகத்திற்குள் இறங்கி சமூகத்தைப் பாதுகாக்க முன்வரவேண்டும். யாழ்.பல்கலைக்கழத்தில் தற்போதுள்ள துணைவேந்தரின் காலத்தில் பல பேராசிரியர்கள் உருவாகி வருகின்றார்கள்.

இவ்வாறாக வருகின்ற அனைத்துப் பேராசிரியர்களும் ஒன்றிணைந்து சமுதாயத்தை முன்னேற்றவேண்டும். அது மட்டுமன்றி துணைவேந்தர் பல்கலைக்கழகத்திற்கு புதிய பாடத்திட்டம் ஒன்றை  ஆரம்பிக்க வேண்டும் என்றால் அதற்கு காணிகள் கட்டடங்கள் இல்லை என்று அந்தத் திட்டத்தினை கைவிடாது தெல்லிப்பளை தேவஸ்தானத்திடம் தொடர்பு கொண்டால் நாம் அதற்கான வழி அமைத்துத் தருவோம்.

யாழ்ப்பாணத்திற்கு திருமண மண்டபங்கள் போதும் இனி கல்வி மண்டபங்கள் உருவாக வேண்டும். தொழிற்சாலைகள் உருவாகவேண்டும். இதன்மூலம் கல்வி இடைவிலகிய மாணவர்கள் வேலைவாய்ப்பில்லாதவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கி வேலை வாய்ப்புக்களை வழங்க முன்வரவேண்டும்

தற்போதைய சூழலில் தனியார் பல்லைகழகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது. இத்தகைய அனுமதிகள் பெற்று தனியார் பல்கலைக்கழகங்கள் இங்கும் உருவாகின்றபோது வாள்வெட்டுக் கலாச்சாரம் போதைவஸ்துக் கலாச்சாரங்கள் இல்லாது போகும் நிலை ஏற்படும் எனவே       பேராசிரியர்கள் கல்விமான்கள் சமுதாயப் பெரியார்கள் சான்றோர்கள் ஒன்றுகூடி இதற்கான முயற்சிகளை எடுக்கவேண்டும்.

எமதுபிரதேசத்தை அழகாக்குவதற்கு தெற்கில் இருந்துதான் யாரும் வரவேண்டியது இல்லை நாங்களே அதனைசெய்ய முன்வரவேண்டும் . இளைய தலைமுறையினர் கற்பனை வளம் இல்லாதவர்களாக காணப்படுகின்றார்கள் பிறர் கற்பனையிலேயே அவர்கள் இருக்கின்றார்கள் இதில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் நல்லமுயற்சிகளை செய்யத்தொடங்கினால் அலையத்தேவையில்லை எல்லாம் எங்களைத் தேடியே வரத்தொடங்கும் நல்லதை சிந்திக்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சனல் 4 தொலைக்காட்சியிடம் ராஜபக்ஷர்கள் நஷ்டஈடு...

2023-09-27 15:54:32
news-image

பாணந்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சை...

2023-09-27 17:34:31
news-image

2048 - பசுமைப் பொருளாதார வேலைத்திட்டத்திற்குத்...

2023-09-27 16:19:07
news-image

வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு பிரான்ஸ் பூரண ஆதரவை...

2023-09-27 21:50:31
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி 3 ஆவது...

2023-09-27 17:31:08
news-image

இலங்கை திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற தவறிவிட்டது...

2023-09-27 18:01:44
news-image

பயணச்சீட்டின்றி ரயிலில் பயணிப்பவர்களிடம் சோதனை நடவடிக்கையை...

2023-09-27 17:47:28
news-image

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்...

2023-09-27 21:51:17
news-image

கட்டாரிலிருந்து வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்திய நபர்...

2023-09-27 21:53:11
news-image

யாழ். சுன்னாகத்தில் வீடு புகுந்து 13...

2023-09-27 17:18:30
news-image

இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமனம்

2023-09-27 16:51:12
news-image

மருதங்கேணியில் சட்டவிரோத மண் அகழ்வை தடுக்க...

2023-09-27 22:00:47