மக்கள் வங்கியின் கோடி அதிர்ஷ்டம் 2023 சீட்டிழுப்பில் 4 இலட்சாதிபதிகள் தெரிவு

Published By: Vishnu

29 May, 2023 | 03:56 PM
image

மக்கள் வங்கியின் ‘‘People’s Remittance கோடி அதிர்ஷ்டம் 2023’ ஊக்குவிப்பின் ஜனவரி, பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான இலட்சாதிபதி வெற்றியாளர்களைத் தெரிவு செய்வதற்கான குலுக்கல் சீட்டிழுப்பு அண்மையில் கொழும்பு 10 இல் உள்ள மக்கள் வங்கி, வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவை வளாகத்தில் இடம்பெற்றது.

மேலும், 2023 ஜனவரி 01 முதல் மே 13 வரையிலான காலப்பகுதிக்கான வாராந்த வெற்றியாளர்களும் இந்நிகழ்வில் குலுக்கல் சீட்டிழுப்பு மூலமாகத் தெரிவு செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு தலா ரூபா 100,000 பரிசாக வழங்கப்படவுள்ளது.

ரொஹான் பத்திரகே - மக்கள் வங்கியின் சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் (வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள்), ரி.எம்.டபிள்யூ. சந்திரகுமார - பிரதிப் பொது முகாமையாளர் (வழங்கல் மார்க்க முகாமைத்துவம்), கங்கா சேனநாயக்க - பிரதிப் பொது முகாமையாளர் (மீட்புகள்), அருணி லியனகுணவர்தன - உதவிப் பொது முகாமையாளர் (வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவை), ஷாந்த கங்காபடகே - உதவிப் பொது முகாமையாளர் (கணக்காய்வு), திலினி பெரேரா - சிரேஷ்ட முகாமையாளர் (வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவை), விபுல வர்ணகுல - சிரேஷ்ட முகாமையாளர் (தகவல் தொழில்நுட்பம்) மக்கள் வங்கி மற்றும் ஜே.பி. குணதிலக - வருமானவரித் திணைக்களத்தின் (மேற்கு மாகாணம்) சிரேஷ்ட வரி அதிகாரி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். 

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் சிறந்த வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கும் அயராது உழைத்து வருகின்ற இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்காகவும், போற்றிப் பாராட்டுவதற்காகவும் ‘கோடி அதிர்ஷ்டம் 2023’ என்ற சீட்டிழுப்பினை மக்கள் வங்கி ஆரம்பித்திருந்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்