2023 பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் இன்று ஆரம்பம்

Published By: Sethu

29 May, 2023 | 03:33 PM
image

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் சுற்றுப்போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை (28) ஆரம்பமாகவுள்ளது. பாரிஸ் நகரின் ரோலண்ட் காரோஸ் அரங்கில் நடைபெறும் இச்சுற்றுப்போட்டி 'ரோலண்ட் காரோஸ்' சுற்றுப்போட்டி எனவும் அழைக்கப்படுகிறது.

உலகின் 4 கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில், களிமண் தரையில் நடைபெறும் ஒரேயொரு சுற்றுப்போட்டி இதுவாகும்.

இருபாலாருக்கமான ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர், சக்கரநாற்காலி பிரிவுகள் என பல்வேறு பிரிவுகளில் ஜூன் 11 ஆம் திகதி வரை இப்போட்டிகள் நடைபெறும்.

இப்போட்டிகளில் பரிசுகளாக 4.96 கோடி யூரோ வழங்கப்படவுள்ளது. இது கடந்த வருடத்தைவிட 12.3 சதவீதம் அதிகமாகும்.

ஆகக்கூடுதலாக ஒற்றையர் பிரிவுகளில் சம்பியனாகுபவருக்குத் தலா 23 இலட்சம் யூரோ வழங்கப்படும். இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு  11.5 இலட்சம் யூரோ வழங்கப்படும்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 14 தடவைகள் சம்பியனாகி சாதனை படைத்த ஸ்பானிய வீரர் ரபாயெல் நடால், காயம் காரணமாக இவ்வருடப் போட்டியில் பங்குபற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு ஸ்பானிய வீரரான கார்லோஸ் அல்காரெஸ் (20) முதல்நிலை வீரராக களமிறங்குகிறார்.

ரஷ்யாவின் டெனில் மெத்வதேவ் 2ஆம் நிலை வீரராகவும 2 பிரெஞ்சு சம்பியன்ஷிப் பட்டங்கள் உட்பட 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற சேர்பியாவின் நோவாக் ஜோகோவிச் 3 ஆம் நிலை வீரராகவும் களமிறங்குகின்றனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீராங்கனையும் நடப்புச் சம்பியனமான போலந்து வீராங்கனை ஈகா ஸ்வியாதெக் தனது பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறார்.

ரோலண்ட் காரோஸில் பெல்ஜிய வீராங்கனை 2005 முதல் 2007 தொடர்ச்சியாக 3 தடவைகள் சம்பியனாகினார். அவருக்குப் பின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் எவரும் தொடர்ச்சியாக 2 தடவைகள் சம்பியனாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது (சேது)

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35