புத்தசாசனத்துக்கு பாதிப்பெனக் குறிப்பிட்டு உண்மை பிரச்சினைகளை மூடி மறைக்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு - டிலான் பெரேரா

Published By: Digital Desk 5

29 May, 2023 | 03:42 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜெரோம் பெர்னாண்டோ,ஞானசார தேரர் ஆகிய இருவரும் நாணயத்தின் இரு பக்கங்களை போன்றவர்கள். இருவரும் மதவாதிகளே.

புத்தசாசனத்துக்கு பாதிப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு உண்மை பிரச்சினைகளை மூடி மறைக்கும் செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றன என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதி டிலான் பெரேரா தெரிவித்தார்.

நாவல பகுதியில் திங்கட்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டில் கடந்த காலங்களை காட்டிலும் தற்போது சமூக விரோத செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

கடந்த ஐந்து மாத காலத்துக்குள் மாத்திரம் 27 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன்,அதனால் 19 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

போதைப்பொருள் வியாபாரம்,பாதாள குழு செயற்பாடு என்பன பகிரங்கமாகவே இடம்பெறுகின்றன.மேல் மற்றும் தென் மாகாணங்களில் பாதாள குழுவின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளன.நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு முறையாக பேணப்படுவதில்லை.

புத்தசாசனத்துக்கு பாதிப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு நாட்டின் உண்மை பிரச்சினைகளை மூடி மறைக்கும் செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றன.

அரசாங்கத்துக்கு சார்பாக செயற்படும் ஒருசில ஊடகங்களும் இவ்வாறான விடயங்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குகின்றன.

மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குறிப்பிட்ட கருத்து முறையற்றது.இவ்விடயத்தில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் பின்னணியில் அந்த விடயம் அரசியலுக்காகவும், நாட்டின் பிரதான பிரச்சினையாகவும் பேசப்படுகிறது.

ஜெரோம் பெர்னாண்டோவின் விவகாரத்திற்கு பின்னர் தற்போது நகைச்சுவை மேடை பேச்சாளர் நடாஷா எதிரிசூரிய என்பவரின் விவகாரம் பிரதான விடயமாக பேசப்படுகிறது.

மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் விவகாரத்தை தொடர்ந்து கடந்த காலங்களில் தலைமறைவாகியிருந்த பலர் தற்போது வெளிவந்துள்ளார்கள்.

ஜெரோம் பெர்னாண்டோ,ஞானசார தேரர் ஆகிய இருவரும் நாணயத்தின் இரு பக்கங்களை போன்றவர்கள்.இருவரும் மதவாதிகளே,தேவையில்லாத பிரச்சினைகளை மாத்திரம் தோற்றுவிக்கிறார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமை பேரவையிலிருந்து இலங்கை வெளியேறவேண்டும்...

2025-03-21 08:32:13
news-image

இன்றைய வானிலை

2025-03-21 06:18:19
news-image

எனக்கு பட்டலந்த குறித்து பேசுவதில் தற்போது...

2025-03-21 06:14:02
news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34