யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிளும் கனரக வாகனமொன்றும் மோதிக்கொண்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததோடு, கனரக வாகன சாரதி கைதான சம்பவம் இன்று திங்கட்கிழமை (29) மதியம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதி, முட்டாஸ் கடை சந்திக்கு அருகாமையில் நடந்த இவ்விபத்து தொடர்பில் தெரியவருவதாவது:
யாழ்ப்பாண நகர் பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் யாழ் நகரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கனரக வாகனமொன்றும் மோதியதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.
மீசாலையைச் சேர்ந்த இராஐரட்ணம் அபிதாஸ் என்கிற 29 வயதானவரே இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அதனையடுத்து, கனரக வாகன சாரதியை யாழ்ப்பாண பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அத்தோடு, சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதையடுத்து, விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM