புட்டினின் கூலிப்படையான வாக்னர் குழுவை அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கவேண்டும்- எதிர்கட்சி

Published By: Rajeeban

29 May, 2023 | 12:56 PM
image

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின்கூலிப்படையான வாக்னெர் குழுவைபயங்கரவாத அமைப்பு என அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவிக்கவேண்டும் எனஅவுஸ்திரேலிய எதிர்கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

உக்ரைனின் பக்முத் நகரை கைப்பற்றுவதற்காக ரஸ்யா ஒன்பது மாதங்களாக முயற்சிகளை  மேற்கொண்டுள்ள அதேவேளை  வாக்னெர் குழுவே இந்த நடவடிக்கைகளில் முக்கிய பங்கை வகிக்கின்றது.

வாக்னெர் குழு பாரிய மனித உரிமைமீறல்களில் ஈடுபடுகின்றது என குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலிய அரசாங்கம் வாக்னெர் குழுவை பயங்கரவாத பட்டியலில் சேர்ப்பதற்கு ஏற்ற வகையில் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என எதிர்கட்சியின் உள்துறை விவகாரங்களிற்கான பேச்சாளர் ஜேம்ஸ்பட்டர்சன்வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இந்த குழுவை  அவுஸ்திரேலியா பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கவேண்டும் என்பதற்கான இரண்டு காரணங்கள் உள்ளன முதலாவது நடைமுறைக்காரணங்களிற்கானது-பயங்கரவாத அமைப்பு என அந்த அமைப்பை அறிவித்தால் அவர்களுடன் தொடர்புகொள்வது அல்லது அவர்கள் சார்பாக நிதிதிரட்டுவது அவர்கள் சார்பில்ஆட்களை திரட்டுவது சட்டவிரோதமானதாக கருதப்படும் என செனெட்டர் பட்டர்சன்தெரிவித்துள்ளார்.

இதில் ஒரு தார்மீக கூறும் உள்ளது  அவுஸ்திரேலியா தனது சகாக்களுடன் இணைந்து நின்று அந்த குழுவின் நடவடிக்கைகளை நாங்கள் சகித்துக்கொள்ளப்போவதில்லை என  தெரிவிப்பதற்கான சந்தர்ப்பம் இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாக்னர் குழுவை  ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாத அமைப்பாக  அறிவிக்கவேண்டும் என சமீபத்தில் பிரான்ஸ் நாடாளுமன்றம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

பிரிட்டன் இந்த குழுவை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என தகவல்கள் வெளியாகின்றன.

அமெரிக்கா வாக்னர் குழுவை குறிப்பிடத்தக்க எல்லை கடந்த குற்றக்குழு என்ற பட்டியலில் சேர்த்துள்ளதுடன் தடைகளை அறிவித்துள்ளது.

வாக்னர் குழுவை  ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாத அமைப்பாக  அறிவிக்கவேண்டும் என சமீபத்தில் பிரான்ஸ் நாடாளுமன்றம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

பிரிட்டன் இந்த குழுவை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என தகவல்கள் வெளியாகின்றன.

அமெரிக்கா வாக்னர் குழுவை குறிப்பிடத்தக்க எல்லை கடந்த குற்றக்குழு என்ற பட்டியலில் சேர்த்துள்ளதுடன் தடைகளை அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிமுக- பாஜக கூட்டணி முறிந்தது! அதிமுக...

2023-09-25 17:44:24
news-image

எனது பெற்றோர் அகதிகள் நானும்அகதி எனது...

2023-09-25 12:36:49
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து...

2023-09-25 11:12:56
news-image

தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 19...

2023-09-25 09:59:32
news-image

சூரியனை சுற்றியுள்ள மிகவும் ஆபத்தான சிறுகோளின்...

2023-09-25 06:35:43
news-image

சீக்கிய செயற்பாட்டாளர் படுகொலை - அமெரிக்காவே...

2023-09-24 13:23:59
news-image

பெங்களூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம் :...

2023-09-24 14:33:39
news-image

உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன்...

2023-09-23 12:24:13
news-image

ரஸ்யாவின் கிரிமியா கருங்கடல் கடற்படைதளத்தின் மீது...

2023-09-23 08:34:44
news-image

ஜி20 மாநாட்டில் பல தலைவர்கள் கனடா...

2023-09-22 14:58:18
news-image

உலகின் மிகப்பெரிய ஊடக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய...

2023-09-22 12:59:14
news-image

சீக்கிய செயற்பாட்டாளர் கொல்லப்பட்ட விவகாரம் -...

2023-09-22 13:05:48