உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான குழாம்களை ஐ.சி.சி. உறுதிப்படுத்தியது

Published By: Digital Desk 5

29 May, 2023 | 01:03 PM
image

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஜுன் 7ஆம் திகதியிலிருந்து 11ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான குழாம்களை ஐசிசி உறுதிப்படுத்தியுள்ளது.

போட்டிக்கு பொறுப்பான தொழில்நுட்ப குழுவின் அனுமதியுடன் மாத்திரமே இந்த குழாம்களில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுத்த முடியும் என ஐசிசி அறிவித்துள்ளது.

உலகின் அதிசிறந்த டெஸ்ட் அணியைத் தீர்மானிக்கும் போட்டியாக கருதப்படும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஜுன் மாதம் 12ஆம் திகதி மேலதிக தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. போட்டியை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள 5 தினங்களில் ஆட்ட நேரம் தடைப்பட்டால் அதனை ஈடு செய்வதற்கு 6ஆம் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஐசிசியினால் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2019இல் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் நடைபெறும் 2ஆவது அத்தியாயத்திற்கான இறுதிப் போட்டி இதுவாகும்.

இந்த இறுதிப் போட்டியை முன்னிட்டு அவுஸ்திரேலியாவும் இந்தியாவும் பலம்வாய்ந்த குழாம்களை அறிவித்துள்ளன.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற அங்குரார்ப்பான அத்தியாய இறுதிப் போட்டியில் நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்த இந்தியா, இம்முறை அவுஸ்திரேலியாவை வெற்றிகொண்டு அந்தத் தோல்வியை நிவர்த்திசெய்ய கங்கணம் பூண்டுள்ளது.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றிபெறும அணிக்கு இலங்கை நாணயப்படி 47 கோடியே 65 இலட்சத்து 73,920 ரூபா பணப்பரிசும் தோல்வி அடையும் அணிக்கு இதில் சரிபாதி தொகை  பணப்பரிசும்    கிடைக்கும்.

குழாம்கள்

அவுஸ்திரேலியா: பெட் கமின்ஸ் (தலைவர்), ஸ்கொட போலண்ட், அலெக்ஸ் கேரி, கெமரன் க்றீன், மார்க்கஸ் ஹெரிஸ், ஜொஷ் ஹேஸ்ல்வூட், ட்ரவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னுஸ் லபுஸ்சான், நேதன் லயன், ஜொஷ் இங்லிஷ், டொட் மேர்பி, ஸ்டீவ் ஸ்மித், மிச்செல் ஸ்டார்க், டேவிட் வோர்னர்.

பதில் வீரர்கள்:  மிச்செல்   மார்ஷ், மெட் ரென்ஷோ.

இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), ரவிச்சந்திரன் அஷ்வின், கே. எஸ். பாரத், ஷுப்மான் கில், ரவிந்த்ர ஜடேஜா, விராத் கோஹ்லி, இஷான் கிஷான், அக்சார் பட்டேல், சேட்டேஷ்வர் புஜாரா, அஜின்கியா ரஹானே, மொஹமத் ஷமி, மொஹமத் ஷிராஜ், ஷர்துல் தாகூர், ஜெய்தேவ் உனந்த்காட், உமேஷ் யாதவ்.

பதில் வீரர்கள்: யஷஸ்வி ஜய்ஸ்வால், முக்கேஷ் குமார், சூரியகுமார் யாதவ்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58