இந்திய அரசாங்கம் நட்டஈடு கோரியதாக எந்த சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கவில்லை - நீதி அமைச்சர்

Published By: Digital Desk 3

29 May, 2023 | 12:59 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

இந்திய அரசாங்கத்தினால் நட்டஈட்டு தொகை ஒன்றை கோரியதாக நான் எந்த சந்தர்ப்பத்திலும் தெரிவித்ததில்லை.

ஆனால் நியூ டயமண்ட், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் ஆகிய இரண்டு கப்பல்களின் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக இந்திய கடற்படைக்கு ஏற்பட்ட செலவை மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறே  இந்திய உயர் ஸ்தானிகர் கோரி இருந்தார் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நியூ டயமண்ட் கப்பலில் ஏற்பட்ட தீ அணைத்தல் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்டுக்கொண்டிருந்த அழிவின்போது எமது நாட்டின் கோரிக்கைக்கமைய இந்திய அரசாங்கத்தினால் கடற்படையை தந்துதவிதயதன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்ட செலவை மீண்டும் பெற்றுக்கொள்ள மேற்கொள்ளப்படுகின்ற கோரிக்கை தொடர்பாக நீதி, சிறைச்சாலைகள் நடவடிக்கை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நியூ டயமண்ட் கப்பலில் ஏற்பட்ட தீ அணைத்தல் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்டுக்கொண்டிருந்த அழிவின்போது அதனை கட்டுப்படுத்துவதற்காக எமது கடற்படையுடன் எமது கோரிக்கைக்கமைய இந்திய கடற்படையின் உதவியை வெற்றிகரமாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தோம்.

அத்துடன் இந்திய அரசாங்கத்தினால் நட்டஈட்டு தொகை ஒன்றை கோரியதாக நான் எந்த சந்தர்ப்பத்திலும் தெரிவித்ததில்லை. என்றாலும் இந்திய அரசாங்கத்தினால் கடற்படையை செலுத்தியதன் காரணமாக அவர்களுக்கு ஏற்பட்ட செலவை மீள் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்திய உயர்ஸ்தானிகரால் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி இரண்டு கடிதங்கள் ஊடாக நீதி அமைச்சர் என்ற வகையில் எனக்கும் வெளிவிவகார அமைச்சருக்கும்  அறிவுறுத்தி இருக்கிறது.

அதன் பிரகாரம் இந்திய கடற்படையை நியூ டயமண்ட் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு ஈடுபடுத்தியதன் மூலம் ஏற்பட்ட செலவு 400 மில்லியன் இந்திய ரூபா மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு இந்திய கடற்படைக்கு ஏற்பட்ட செலவு  490 மில்லியன் இந்திய ரூபாவையும் அவர்களுக்கு செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் எமக்கு அறிவித்திருக்கிறார்கள். 

அந்த இரண்டு கப்பல்கள் தொடர்பான வழக்குகள் மூலம் அந்த பணத்தை பெற்றுக்கொண்டு , அதனை இந்தியாவுக்கு செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு ஆலாேசனை வழங்கி இருக்கிறது.

மேலும் நட்டஈட்டு தொகை ஒன்றை இலங்கை அரசாங்கத்தினால் கேட்டிருக்கவில்லை என்றும் இரண்டு கப்பல்களின் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக இந்திய கடற்படைக்கு ஏற்பட்ட செலவை மீள வழங்குமாறே  இந்திய உயர் ஸ்தானானிகரால் விடுத்திருந்த அறிவிப்பில் தெளிவாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08