சூடானில் மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ பணியாளர்களிற்கு எதிராக யுத்த குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன என பிபிசி தெரிவித்துள்ளது.
மருத்துவமனைகளில் நோயாளர்கள் காணப்படும் வேளையில் மருத்துவமனைகள் ஆட்டிலறி ரொக்கட் தாக்குதல்களுக்குள்ளாகின்றன என தெரிவித்துள்ள பிபிசி வைத்தியர்கள் வேண்டுமென்றே இலக்குவைக்கப்படுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது.
சூடான் தலைநகர் கார்ட்டோமில் உள்ள 88 மருத்துவமனைகளில் ஒரு சில மருத்துவமனைகள் மாத்திரமே இயங்குகின்றன என சூடானின் மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
செய்மதி படங்கள் உட்பட பல விடயங்களை பயன்படுத்தி பிபிசியின் குழுவினர் மருத்துவமனைகள் இலக்குவைக்கப்படுகின்றன என்ற முடிவிற்கு வந்துள்ளனர்.
மருத்துவமனைகள் மற்றும் மருத்துவநிலையங்கள் எவ்வாறு தாக்கப்படுகின்றன என்ற விபரத்தை பெறுவதற்காக பிபிசி குழுவினர் பல மருத்துவர்களுடன் உரையாடியுள்ளனர்.
மருத்துவமனைகள் மீதான தாக்குதல்களை சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மோசமாக மீறும் செயல் என தெரிவித்துள்ள உலகசுகாதார ஸ்தாபனம் இவற்றை நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலக்குவைக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஒன்று தலைநகரில் உள்ள இப்சினா மருத்துவமனை என தெரிவித்துள்ள பிபிசி வைத்தியர்கள் பொதுமக்களிற்கு சிகிச்சை வழங்கிக்கொண்டிருந்தவேளை மருத்துவமனையை இலக்குவைத்து ஆட்டிலறி விமானதாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
மே 19ம்திகதி இந்த தாக்குதல் இடம்பெற்ற மருத்துவமனையில் இருந்ததாக தெரிவித்துள்ள வைத்தியர் அலா எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் நான் பணியாற்றிய மருத்துவமனை மூன்று குண்டு தாக்குதலிற்குள்ளாகியது நான்காவது குண்டு தாதிமார்தங்கியிருந்த வீட்டில் விழுந்ததில் வீடு தீப்பிடித்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை யுத்த குற்றம் என கருதலாம் என சர்வதேச மனிதாபிமான சட்ட நிபுணர்ஒருவர் தெரிவித்துள்ளார்
விமானதாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் மருத்துவமனைகளில்இருந்துஅனைத்து நோயாளிகளும் பொதுமக்களும் வெளியேற்றப்படுவதை உறுதி செய்வதற்காக முன்கூட்டியே எச்சரிக்கவேண்டிய கடப்பாடு உள்ளது - இது குறித்து யுத்த சட்டங்களில் மிக தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகள்மீது தாக்குதல்கள் இடம்பெற்ற படங்களை பார்வையிட்டுள்ள நிபுணர்கள் அவை ஆட்டிலறி தாக்குதல்கள் என தெரிவித்துள்ளனர்.
எந்தவகை ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை உறுதி செய்ய முடியாததால் யார் இந்த தாக்குதல்களை மேற்கொண்டனர் என்பதை உறுதியாக தெரிவிக்க முடியாதுள்ளது .
சூடான் தலைநகரில் இறுதியாக இயங்கிவந்த ஈஸ்ட் நைல்மருத்துவமனையும் தாக்குதலிற்குள்ளாகியுள்ளது.
குறிப்பிட்ட மருத்துவமனை சுற்றி ஆர்எஸ்எவ் ஆயுதகுழுவை சேர்ந்தவர்கள் காணப்பட்டதையும்அவர்களிடம் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் இருந்தததையும் உறுதி செய்வதற்கான ஆதாரங்களை பிபிசி பார்வையிட்டுள்ளது
bbc
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM