அல் - ஹாபிழ் அஸ்மி சாலியின் மறைவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அனுதாபம்

Published By: Ponmalar

29 May, 2023 | 11:35 AM
image

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவரும் பிரபல அறிவிப்பாளருமான அல்-ஹாபிழ் அஸ்மி சாலியின் மறைவு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா  போரம் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளது. 

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஒலிபரப்புத் துறையில் பணிபுரிந்த அல்-ஹாபிஸ் அஸ்மி சாலியின் மறைவு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் போரம் விடுத்துள்ள அனுதாப செய்தியிலே தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

ஊடகத்துறையில் பணிபுரியும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஹாபிஸ்களுள் ஒருவரான அஸ்மியை ஆளுமைகள் நிறைந்த ஒருவராக அடையாளப்படுத்தலாம். சிங்கள, தமிழ், முஸ்லிம் ஊடக சமூகத்தில் எல்லோராலும் கௌரவமாக மதிக்கப்பட்ட அஸ்மியின் மறைவு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

மர்ஹும் அஸ்மி சாலி ஆசிரியராக, ஒலிபரப்பாளராக, ஒரு நாடகக் கலைஞராக, தனது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருக்கின்றார். 

அவருடைய மரணமானது இத்துறையில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கை வானொலியில் அறிவிப்புத் துறையில் ஹாபிஸ்கள் இணைந்திருந்தது ஒரிரு சந்தர்ப்பமாகும். அந்த வகையில் அஸ்மி சாலி ஹாபிஸாக இருந்து தனது பணியைச் சிறப்பாக நிறைவேற்றி இருக்கிறார். அவர் கல்வித்துறையிலும் ஓர் ஆசிரியராக தாம் வாழ்ந்த பிரதேசத்தின் சமூக அபிவிருத்திக்கும் பல முன்மாதிரியான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றார். 

அன்னாருடைய மறைவு ஊடகத்துறைக்கு மட்டுமன்றி, கல்வித்துறைக்கும்  பேரிழப்பாகும். 

அவரது  மறைவுக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு, அன்னாருடைய குடும்பத்தவர்களுக்கும் வல்ல இறைவன் மன ஆறுதலை வழங்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் சந்தோஷ் நாராயணனின் பிரமாண்ட இசை...

2023-09-25 21:57:12
news-image

கொய்கா - அகோஃப் அறிவுப் பரப்புரைத்...

2023-09-25 13:04:39
news-image

கேகாலை புனித அன்னை மரியாள் தேவாலயத்தின்...

2023-09-25 10:35:59
news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில்...

2023-09-24 19:04:27
news-image

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை யாழில்...

2023-09-24 15:02:28
news-image

நல்லூரில் திலீபன் நினைவாக ஆவணக் காட்சியகம்...

2023-09-23 19:52:35
news-image

திருமலை, பாலையூற்று சீரடி நாக சாயி...

2023-09-23 18:47:23
news-image

ஈஷ்வரலயா கலைக்கூடத்தின் பரதநாட்டிய நிகழ்வு

2023-09-23 18:29:15
news-image

விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நாளை...

2023-09-23 18:06:29
news-image

பிரதம நிறைவேற்று அதிகாரிகள் மாநாடு

2023-09-23 19:40:52
news-image

விநாயகர் சதுர்த்தி விஷர்ஜன விழா 

2023-09-22 18:32:02
news-image

1500 ஓவியங்களைக் கொண்ட 3 நாள்...

2023-09-22 18:36:44